மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
உள்ளூர் விடுமுறை

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சிதம்பரம் அருள்மிகு ஸ்ரீசபாநாயகர் திருக்கோவில் ஆருத்ரா தரிசனம் பெருவிழா நடைபெறும் நாளான 10.01.2020 வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில்; பிப்ரவரி மாதத்தில் விடுமுறை நாளான 01.02.2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

09/01/2020 03/02/2020 பார்க்க (25 KB)
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி 31.12.2019 -ல் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கத் தொகை ரூ.1000/=- மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்களால் , நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 09.01.2020 முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொங்கல் பரிசுப் பொருட்களை ஒருசேர வழங்கப்பட உள்ளது.

09/01/2020 31/01/2020 பார்க்க (381 KB)
உள்ளாட்சித் தேர்தல்கள் 2019

கடலூர் மாவட்டத்தில் ஊரக பகுதியில் சாதாரண உள்ளாட்சித் தேர்தல்கள் 2019-க்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

09/12/2019 11/01/2020 பார்க்க (587 KB)
ஊரக பகுதியில் சாதாரண உள்ளாட்சித் தேர்தல்

கடலூர் மாவட்டத்தில் ஊரக பகுதியில் சாதாரண உள்ளாட்சித் தேர்தல்கள் 2019-க்கான இரண்டு கட்டங்களாக ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்துவது தொடர்பாக பத்திரிக்கை செய்தி மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் 02.12.2019 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது

04/12/2019 11/01/2020 பார்க்க (490 KB)
ஆவணகம்