மூடு

மின்னாளுமை

கடலூர் மாவட்ட மின்னாளுமை செயலக்கங்கள் கிழே தரபட்டுள்ளன :

மின்னாளுமை மாவட்ட திட்டம் என்பது தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கை முனைப்பு திட்டங்களின் (State Mission Mode Project ) ஒரு பகுதியாக விளங்குகிறது. மிக அதிக அளவில் சேவை வழங்கப்படும் அரசு சேவைகளில், சேவைகளின் தரத்தை உயர்த்தி, இணையம் மூலமாக வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு செயல்பாடுகள் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறது. 06.01.2012 தேதியிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை எண்.2 ன் படி எல்லா மாவட்டங்களிலும் மின்னாளுமை மாவட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மின்னாளுமை சங்கம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக்கொண்ட மாவட்ட மின்னாளுமை சங்கம், 22.04.2013 அன்று ஏற்படுத்தப்பட்டது.

மின் மாவட்ட சேவைகள்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 10 வட்டங்களிலும் கீழ்கண்ட மின் மாவட்ட சேவைகள் வருடம் 2014 முதல் செயல்பட தொடங்கியது.
வருவாய்துறை சேவைகள் :

  1. சாதிச்சான்றிதழ்
  2. இருப்பிட சான்றிதழ் (5 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கு) /
    குடியிருப்பு சான்றிதழ்(3 அல்லது அதற்கு கீழுள்ள வருடங்களுக்கு)
  3. வருமானச் சான்றிதழ்
  4. முதல் பட்டதாரி சான்றிதழ்
  5. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்
பொது சேவை மையங்கள் – கடலூர் மாவட்டம்:
வ.எண் சேவை நிறுவனம் மையங்களின் எண்ணிக்கை
1. அரசு கேபிள் தொலைக்காட்சி 17
2. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் 181
3. மகளிர் திட்டம் 231
5. கிராமப்புற தொழில் முனைவோர் 39
மொத்தம் 466

வட்டம் வாரியாக பொது சேவை மையங்களின் விவரம் அறிய, இங்கே சொடுக்கவும்

சமூக நலத்துறைசேவைகள்:

  1. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்
  2. அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம்
  3. ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவி திட்டம்
  4. தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்
  5. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்
  6. பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் -I
  7. பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II

கீழ்கண்ட இணைய வழி பட்டா மாறுதல் அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

  1. தமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (ஊரகம்)
  2. தமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (ஊரகம்)
  3. தமிழ்நிலம்– கூட்டு பட்டா மாறுதல் (ஊரகம்)

 

பல்வேறு மின் ஆளுமை சேவை கட்டணம்
வ.எண் சேவையின் பெயர் பொது சேவை மைய கட்டணம்
1. வருவாய் துறை சான்றிதழ்கள் Rs.60
2. சமூக நலத்துறை சேவைகள் Rs.120
3. இணைய வழி பட்டா மாறுதல் கட்டணம் Rs.60

பொது மக்களுக்கான பயனுள்ள இணைய முகவரிகள்::
https://edistricts.tn.gov.in/revenue/status.html – வருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை
https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html – சமூக நலத் திட்டங்களுக்கான விண்ணப்ப நிலை
https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html – சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்பு
http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/status.html – குழந்தை பாதுகாப்புத் திட்ட விண்ணப்ப நிலை
பொது சேவை மைய கணினி இயக்குநர்களுக்கான பயனுள்ள இணைய முகவரிகள்:
https://edistricts.tn.gov.in:8443/certificates_csc – மின் ஆளுமை -பொது இ- சேவை மைய நுழைவுப் பக்கம்
https://tnesevai.tn.gov.in/ – இ சேவை – பொது இ- சேவை மைய நுழைவுப் பக்கம்
https://edistricts.tn.gov.in/csc_reports/login.jsp – பொது இ-சேவை மைய அறிக்கைக்கான நுழைவுப் பக்கம்
துறை சார்ந்த அலுவலர்களுக்கான பயனுள்ள இணைய முகவரிகள்:
https://edistricts.tn.gov.in/revenue/login.jsp – மின் ஆளுமை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைவுப் பக்கம்
https://edistricts.tn.gov.in/revenue_report/login.jsp – வருவாய்த்துறை அலுவலர்களின் அறிக்கைக்கான நுழைவுப் பக்கம்
http://tamilnilam.tn.gov.in/Revenue/ – தமிழ்நிலம் – அலுவலர்களின் நுழைவுப் பக்கம்
https://edistricts.tn.gov.in/socialwelfare/login.jsp – சமூக நலத்துறை- திருமண நிதி உதவி திட்டம் – அலுவலர்களின் நுழைவுப் பக்கம்.
http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/login.jsp – சமூகநலத்துறை-குழந்தை பாதுகாப்புத் திட்டம் – அலுவலர்களின் நுழைவுப் பக்கம்.