மூடு

மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

கடலூர் மாவட்டம்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள்:

  1. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
  2. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்
  3. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்

திட்டங்கள் பற்றிய விளக்கம்:-

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்:-

இந்தியா அரசானது, சுவர்ண ஜெயந்தி கிராம சுய வேலைவாய்ப்புத் திட்டம் என்பதை மறுசீரமைத்து மத்திய அரசு பங்களிப்புடன் கிராமப்புறங்களின் வறுமை ஒழிப்பு திட்டமாக தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற பெயரில் மத்திய மற்றும் மாநில அரசுப் பங்குத் தொகையாக 70 : 30 என்ற விகிதாச்சார அடிப்படையில் நிதி வழங்கப்பட்டு, தமிழகத்தில் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் இத்திட்டமானது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு 5 முதல் 7 வருடங்களுக்குள் ஊரகப் பகுதிகளில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு நீடித்த நிலையான வாழ்வாதாரத்தினை உயர்த்தி பொருளாதார மேம்பாடு அடைய வழிவகை செய்யும் இலக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது கடலூர் மாவட்டத்தில் கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, கீரப்பாளையம், கம்மாபுரம், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, மேல்புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டை ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வருகிறது. விருத்தாச்சலம், நல்லூர், மங்களூர் மற்றும் காட்டுமன்னார்கோயில் ஆகிய 4 ஒன்றியங்களில் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்பட்டு வந்த புதுவாழ்வு திட்டம் 30.06.2017 முடிவடைந்தமையால், 01.07.2017 முதல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது.

10 முதல் 20 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு களப்பகுதியாக வரையறுக்கப்பட்டு ஒரு களப்பகுதிக்கு 3 பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் வீதம் 41 களப் பகுதிகளில் 123 பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

திட்ட செயல்பாடுகள் : சுய உதவிக் குழுக்கள் அமைத்தல்

திட்டம் பற்றிய விளக்கம் :-

ஒரே குடியிருப்பு / ஊராட்சியினை சார்ந்த ஒத்த சிந்தனை உள்ள ஏழ்மை நிலையில் உள்ள 18 முதல் 60 வயதிற்குட்பட்ட மகளிர், மாற்றுதிறனாளிகளை கொண்டு 12 முதல் 20 நபர்களை ஒருங்கிணைத்து சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.  மாற்றுதிறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பழங்குடியினர் மக்களாக இருப்பின் 5 முதல் 20 நபர்களை கொண்ட சிறப்பு குழுக்களாகவும் அமைக்கப்படும்.

திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள் :-

  • 18 முதல் 60 வயதிற்குட்பட்ட மகளிர்.
  • மாற்றுதிறனாளிகளாக இருப்பின் 0 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள்.
  • 12 முதல் 20 மகளிரை ஒருங்கிணைத்து சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
  • 5 முதல் 20 மாற்றுதிறனாளிகள், பழங்குடியின மக்கள் ஒருங்கிணைத்து சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
  • திட்ட செயல்பாட்டிற்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள சுய உதவிக்குழுக்களிலிருந்து விடுப்பட்டுள்ள ஏழை மகளிரை கண்டறிந்து புதிய சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

திட்டத்தில் பயன் பெறுவதற்கான நடைமுறைகள் :-

  • ஒரே குடியிருப்பு / ஊராட்சியினை சார்ந்த ஒத்த சிந்தனை உள்ள ஏழ்மை நிலையில் உள்ள 18 முதல் 60 வயதிற்குட்பட்ட மகளிர், மாற்றுதிறனாளிகளை ஒருங்கிணைத்து அவர்கள் குடியிருக்கும் பகுதியில் கூட்டம் நடத்தப்பட வேண்டும்
  • அனைவரின் ஒப்புதலுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சுய உதவிக் குழு அமைக்கப்பட வேண்டும்.
  • சுய உதவிக் குழு உறுப்பினர்கள் குறித்த விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட ஊராட்சியிலுள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புடன் செயல்பட வேண்டும்.

திட்ட செயல்பாடுகள் : சுய உதவிக் குழுக்களுக்கான ஆதார நிதி

திட்டம் பற்றிய விளக்கம் :

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களின் சேமிப்பினை அதிகப்படுத்தவும் உள் கடன் திருப்பம் பழக்கத்தினை ஊக்கப்படுத்தவும் 3 மாத கால நடவடிக்கைகளை கண்காணித்து தரமதிப்பீடு செய்து ரூ.15,000/- வரை ஆதார நிதியாக வழங்கப்படுகிறது.

திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள் :

கடந்த 2012-13 முதல் 2016-17 வரையிலான ஐந்து ஆண்டுகள் காலகட்டங்களில் இலக்காக 2455 நிர்ணயிக்கப்பட்டு 2455 சுய உதவிக் குழுக்களுக்கு ஆதார நிதியாக ரூ.368.00 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு:-

  • கடலூர் மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு தரமதிப்பீடு செய்து தகுதி அடிப்படையில் வங்கிகளிலிருந்து சுழற்சி முறையில் ரூ.1.00 இலட்சம் முதல் ரூ.10.00 இலட்சம் வரையில் பல்வேறு தொழில் நடவடிக்கைகளுக்காக கடன் இணைப்பு வழங்கப்படுகிறது.
  • கடந்த 2012-13 முதல் 2016-17 வரையிலான ஐந்து ஆண்டுகள் காலகட்டங்களில் 41884 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.863.00 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 38764 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.863.00 கோடி வங்கிகளிலிருந்து கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும், 2017-18 (01.04.2017 முதல் 15.02.2018 வரை) இலக்காக 11350 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.322.00 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 8486 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.215.00 கோடி வங்கிகளிலிருந்து கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ஊக்க நிதி:-

கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 683 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ஊக்க நிதியாக ரூ.118.00 இலட்சம் 2012-13-க்கு முன்பாகவும், ரூ. 565.00 இலட்சம் 2012-13 முதல் 2016-17 வரையிலான காலத்திலும் அரசால் வழங்கப்பட்டுள்ளது.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைத்தல் மற்றும் திறன் மேம்பாடு :-

  • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் திட்ட பயனாளிகளான இலக்கு மக்களை கண்டறிந்து அவர்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள ஊராட்சி அளவில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் என்ற மக்கள் அமைப்பு 11 முதல் 20 நபர்களை கொண்டு அமைக்கப்படுகிறது.
  • கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படும் 419 ஊராட்சிகளில் 419 பொது கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களும், 8 சிறப்பு கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களும் சேர்த்து ஆகமொத்தம் 427 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் அமைக்கப்பட்டு ரூ.213.00 இலட்சங்கள் செலவில் அடிப்படை பயிற்சி, நிர்வாகிகள் பயிற்சி,  கணக்கு பராமரித்தல் பயிற்சி, ஆளுமை மற்றும் பொறுப்புணர்வு பயிற்சி மற்றும் புத்தாக்கப் பயிற்சிகள் போன்ற திறன்வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி விடுவித்தல்:-

  • ஊராட்சி அளவில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அமைப்பான கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு பயிற்சிகள், நடைமுறை செலவினங்கள், சுய உதவிக் குழுக்கள் மேம்பாடு, மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர்களுக்கான உதவிகள் மேற்கொள்ள ஒரு ஊராட்சிக்கு ரூ.10.00 இலட்சம் வீதம் வழங்க திட்டமிடப்பட்டு 3 தவணைகளில் 40:40:20 என்ற விகிதாச்சார அடிப்படையில் அரசிடமிருந்து வழங்கப்படுகிறது.
  • கடந்த 2012-13 முதல் 2016-17 வரையிலான ஐந்து ஆண்டுகள் காலகட்டங்களில் 427 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.2109.50 இலட்சம் வழங்கப்பட்டு முழுவதுமாக செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • மேலும், 2017-18 (01.04.2017 முதல் 15.02.2018 வரை) 181 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.181.00 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு சமுதாய முதலீட்டு நிதியிலிருந்து விடுவித்தல் :-

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படும் 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 419 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு சமுதாய முதலீட்டு நிதி விடுவிக்கப்பட்டு அக்கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள ரூ.50,000/- முதல் ரூ.75,000/- வரை ஒரு சுய உதவி குழுவிற்கு கடனுதவி வழங்கப்படுகிறது.

கடந்த 2012-13 முதல் 2016-17 வரையிலான ஐந்து ஆண்டுகள் காலகட்டங்களில் 241  ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் 1078 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.304.00 இலட்சம் தொழில் சார்ந்த கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

DDU-GKY – இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் :-

  • கடலூர் மாவட்டம் ஊரகம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு (ஆண்கள் / பெண்கள் இருபாலரும்) வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைத்து வேலைவாய்ப்பு முகாம்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாமில் வேலைவாய்ப்பினை பெறும் இளைஞர்களை சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து தொடர் பணியாற்றுவதும் உறுதி செய்யப்படுகின்றது.
  • கடந்த 2012-13 முதல் 2016-17 வரையிலான ஐந்து ஆண்டுகள் காலகட்டங்களில் ரூ.9.00 இலட்சம் செலவில் 25 வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ.4.95 இலட்சம் செலவில் 11 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 5571 இளைஞர்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
  • DDU-GKY திட்டத்தின் மூலம் 2014-15 மற்றும் 2015-16 ஆம் ஆண்டில் 750 இளைஞர்கள் 9 பாடப்பிரிவின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டு அதில் 627 இளைஞர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் ஞஐஹ-க்களால் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மாநில நகர்ப்புற  வாழ்வாதார இயக்கம்

இந்தியா அரசானது, சுவர்ண ஜெயந்தி சுராஜ் ராஸ்ட்ரிய யோஜனா (SGSRY) என்ற திட்டத்தினை மறுசீரமைத்து செய்து தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கமாக கடந்த 2011 ஆண்டு முதல் நகராட்சிகளின் நிர்வாக ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டமானது கடந்த 01.09.2016 முதல் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், நெல்லிக்குப்பம், விருத்தாச்சலம், பண்ருட்டி அகிய 5 நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுய உதவிக் குழுக்கள் அமைத்தல்:-

  • 18 முதல் 60 வயதிற்குட்பட்ட மகளிர், மாற்றுதிறனாளிகளை 12 முதல் 20 நபர்களை ஒருங்கிணைத்து சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படுகிறது.
  • கடந்த 2016-17 ஆம் ஆண்டிற்கு இலக்காக 421 நிர்ணயிக்கப்பட்டு 421 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • மேலும் 2017-18 (01.04.2017 முதல் 15.02.2018 வரை) இலக்காக 281 நிர்ணயிக்கப்பட்டு 281 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகமொத்தம் 708 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ. 47.78 இலட்சங்கள் செலவில் 708 சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு அடிப்படை பயிற்சி, குழு நிர்வாக பயிற்சி, கணக்கு பராமரித்தல் பயிற்சி மற்றும் புத்தாக்கப் பயிற்சி போன்ற திறன்வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி :-

  • புதியதாக அமைக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களின் 6 மாத கால நடவடிக்கைகளை கண்காணித்து தரமதிப்பீடு செய்து ரூ.10,000 வரை சுழல் நிதியாக வழங்கப்படுகிறது.
  • கடந்த 2016-17 ஆம் ஆண்டில் மட்டும் 421 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.42.10 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

சுய வேலைவாய்ப்பு திட்டம் (தனி நபர்) :-

  • நகர்ப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வங்கிகளிலிருந்து தனி நபர் கடன் மற்றும் முத்ரா கடன் பெற்று சுயதொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 367 நபர்களுக்கு ரூ.152.70 இலட்சங்கள் வங்கிகளிலிருந்து கடனாக வழங்கப்பட்டுள்ளது.
  • 2017-18ஆம் ஆண்டில் 281 நபர்களுக்கு ரூ.127.00 இலட்சம் வங்கிகளிலிருந்து கடனாக வழங்கப்பட்டுள்ளது.

சுய வேலைவாய்ப்பு திட்டம் (குழுக்கள்)

  • நகர்ப்புறங்களில் உள்ள தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகளிலிருந்து தொழிற் கடன்கள் பெற்று வழங்கப்படுகிறது.
  • கடந்த 2016-17 ஆம் ஆண்டில் மட்டும் 95 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.409.00 இலட்சம் வங்கி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
  • 2017-18ஆம் ஆண்டில் 155 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.489.00 இலட்சம் வங்கிகளிலிருந்து கடனாக வழங்கப்பட்டுள்ளது.

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்

தமிழ்நாடு மாநில அரசானது உழைக்கும் ஏழை மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் வகையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் 2017-18 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்திற்கு 3705 நபர்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10.02.2018 வரை 10514 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. முதற்கட்டமாக 110 பயனாளிகள் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மார்ச் 2018 இறுதிக்குள் மீதமுள்ள 3595 பயனாளிகளுக்கும் மான்ய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பிக்க தகுதி

  • 18 வயது முதல் 40 வயது வரை உள்ள மகளிர்
  • அமைப்பு ரீதியிலான, அமைப்பு சாரா பிரிவில் பணிபுரியும் பெண்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிவோர், சில்லறை வணிகம் மற்றும் இதர தொழில்களில் பணிபுரியும் மகளிர், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்கள், சமூக அமைப்பை சார்ந்த (PLF/ VPRC/ மாவட்ட மகமை அமைப்பை சார்ந்த) பெண்கள், வங்கி தொடர்பு மகளிர் மற்றும் ஆஷா மகளிர் பணியாளர்கள்.
  • ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண்ணிற்கு மட்டும் இப்பயன் கிடைக்கும்.
  • கட்டாயம் ஓட்டுநர் உரிமம் சான்று பெற்றிருக்க வேண்டும்.

முன்னுரிமை

எளிதில் அணுக இயலாத கிராமப் பகுதியில் உள்ளோர், மலைப் பகுதியில் உள்ளோர், ஏழை மகளிரைத் குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள், ஆதரவற்ற விதவை பெண், மாற்றுதிறனாளிகள் (4%) 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமகாத பெண்கள், ஆதிதிராவிடர் , (21% ) பழங்குடியினர் (1%) மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அலுவலக முகவரி:

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,
கடலூர் மாவட்டம்.
தொலைபேசி எண்: 04142-292143.