தாட்கோ (TAHDCO) நலத்திட்டங்கள்
1. வெற்றி தொழில் முனைவோர் திட்டம்
-
தகுதி:
-
விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
-
வயது: 18 முதல் 55-க்குள் இருக்க வேண்டும்.
-
குடும்ப ஆண்டு வருமானம்: ₹3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
-
-
மானிய விவரம்:
-
முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மூலதன மானியம் வழங்கப்படுகிறது.
-
திட்ட தொகையில் 35% அல்லது அதிகபட்சமாக ₹3.50 லட்சம் (எது குறைவோ அது மானியமாக விடுவிக்கப்படும்).
-
6% வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
-
2. ஆதிதிராவிடர்களுக்கான முன்னேற்ற திட்டம் (PM-AJAY)
-
தகுதி:
-
விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
-
வயது: 18 முதல் 55-க்குள் இருக்க வேண்டும்.
-
குடும்ப ஆண்டு வருமானம்: ₹3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
-
-
மானிய விவரம்:
-
திட்ட தொகையில் 50% அல்லது அதிகபட்சமாக ₹50,000/- (எது குறைவோ அது மானியமாக விடுவிக்கப்படும்).
-
-
நிபந்தனை:
-
இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துக்கள் விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்படும்.
-
-
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் (newscheme.tahdco.com).
3. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான பொருளாதார திட்டம்
-
தகுதி:
-
விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
-
குழுவில் 12 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் (வயது: 18 முதல் 55-க்குள்).
-
உறுப்பினர்களின் குடும்ப ஆண்டு வருமானம்: ₹3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
-
மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட குழுவாக இருக்க வேண்டும்.
-
-
மானிய விவரம்:
-
திட்டத்தொகையில் 50% அல்லது அதிகபட்சமாக ₹6.00 லட்சம் (எது குறைவோ அது மானியமாக விடுவிக்கப்படும்).
-
4. மண்ணின் மகள் திட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாய தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
-
தகுதி:
-
விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பெண்ணாக இருக்க வேண்டும்.
-
வயது: 18 முதல் 55-க்குள் இருக்க வேண்டும்.
-
குடும்ப ஆண்டு வருமானம்: ₹3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
-
-
மானிய விவரம் & நிபந்தனைகள்:
-
சந்தை மதிப்பீட்டின்படி, திட்ட தொகையில் 50% அல்லது அதிகபட்சமாக ₹5.00 லட்சம் (எது குறைவோ அது மானியமாக விடுவிக்கப்படும்).
-
நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
-
அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5.00 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.
-
முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
-
வாங்கிய நிலத்தை 10 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது.
-
5. துரித மின் இணைப்பு திட்டம்
-
தகுதி & நிபந்தனைகள்:
-
விண்ணப்பதாரர் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
-
குடும்ப ஆண்டு வருமானம்: ₹3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
-
நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருக்க வேண்டும்.
-
நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
-
TANGEDCO-வில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
-
-
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் (newscheme.tahdco.com).
மானிய விவரம்:
| வ.எண் | குதிரைத்திறன் (HP) | 90% அரசு மானியம் | 10% பயனாளி பங்குத் தொகை | மொத்தத் தொகை |
| 1 | 5 H.P | ₹2,25,000 | ₹25,000 | ₹2,50,000 |
| 2 | 7.5 H.P | ₹2,47,500 | ₹27,500 | ₹2,75,000 |
| 3 | 10 H.P | ₹2,70,000 | ₹30,000 | ₹3,00,000 |
| 4 | 15 H.P | ₹3,60,000 | ₹40,000 | ₹4,00,000 |
6. கல்விக்கடன் திட்டம்
பட்டப்படிப்பினை உள்நாடு மற்றும் வெளிநாட்டில் பயில்வதற்காக NSFDC, NSTFDC, NSKFDC போன்ற நிதி நிறுவனங்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
-
அதிகபட்ச கடன் அளவு:
-
ஆதிதிராவிடர் மாணவர்கள்: உள்நாடு/வெளிநாட்டில் பயில அதிகபட்சமாக ₹40.00 லட்சம்.
-
பழங்குடியின மாணவர்கள்: உள்நாடு/வெளிநாட்டில் பயில அதிகபட்சமாக ₹10.00 லட்சம்.
-
தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகள்: இந்தியாவில் பயில ₹10.00 லட்சம், வெளிநாட்டில் பயில ₹20.00 லட்சம்.
-
-
தகுதி (ஆண்டு வருமான வரம்பு):
-
ஆதிதிராவிடர்: ₹5.00 லட்சத்திற்குள்.
-
பழங்குடியினர்: ₹3.00 லட்சத்திற்குள்.
-
தூய்மைப் பணியாளர்கள்: ₹4.50 லட்சத்திற்குள்.
-
-
வட்டி விகிதம்:
-
ஆதிதிராவிடர்: 6.5%
-
பழங்குடியினர்: 6%
-
தூய்மைப் பணியாளர்கள்: இந்தியாவில் பயில 6%, வெளிநாட்டில் பயில 7% (மாணவிகளுக்கு இந்தியாவில் பயில 5.5%, வெளிநாட்டில் பயில 6.5%).
-
-
திரும்பச் செலுத்தும் காலம்:
-
கடன் பெற்ற மாதத்திலிருந்து வட்டித் தொகையை மாதம் தோறும் செலுத்த வேண்டும்.
-
படிப்பு முடித்த அல்லது வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து (எது முன்னதோ) 5 ஆண்டுகளில் 60 தவணைகளில் கடனை திரும்பச் செலுத்த வேண்டும்.
-
-
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் (tel.tahdco.com).
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம்
உறுப்பினர் பதிவு செய்யும் முறை:
-
விண்ணப்பப் படிவத்தை மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி / TAHDCO மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் பெறலாம்.
-
சுகாதார ஆய்வாளர் / உதவி செயற் பொறியாளர் / செயல் அலுவலர் / மாநகராட்சி ஆணையர் / வட்டாட்சியரிடம் சான்றிதழ் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை TAHDCO மாவட்ட மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
-
சரிபார்ப்பிற்குப் பின் அடையாள அட்டை வழங்கப்படும்.
-
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க: tncwwb.com
நலத்திட்ட உதவிகள் மற்றும் நிதியுதவி விவரம்:
| வ.எண் | நலத்திட்டத்தின் பெயர் | வழங்கப்படும் உதவித் தொகை |
| 1 | விபத்துக் காப்பீட்டுத் திட்டம் | |
| • பணியிடத்தில் விபத்து / மரணம் / உறுப்புகளைச் சரி செய்ய இயலாத இழப்பு | ₹5,00,000 | |
| • ஒரு கை / ஒரு கால் / ஒரு கண் பார்வை இழப்பு / முழு இயலாமை | ₹1,00,000 | |
| • விபத்தினால் மரணம் | ₹1,00,000 | |
| 2 | இயற்கை மரண உதவி | ₹20,000 |
| 3 | ஈமச்சடங்கு உதவித் தொகை | ₹5,000 |
| 4 | கல்வி உதவித்தொகை | |
| • 10-ஆம் வகுப்பு படிப்பவர் (பெண்கள் மட்டும்) / தேர்ச்சி பெற்றவர் (இருபாலரும்) | ₹1,000 | |
| • 11-ஆம் வகுப்பு படிப்பவர் (பெண்கள் மட்டும்) | ₹1,000 | |
| • 12-ஆம் வகுப்பு படிப்பவர் (பெண்கள் மட்டும்) / தேர்ச்சி பெற்றவர் (இருபாலரும்) | ₹1,500 | |
| • பட்டப்படிப்பு (Regular Degree) | ₹1,500 (விடுதி: ₹1,750) | |
| • பட்டமேற்படிப்பு (Post Graduation) | ₹4,000 (விடுதி: ₹5,000) | |
| • தொழினுட்பப் பட்டப்படிப்பு (Professional Degree) | ₹4,000 (விடுதி: ₹6,000) | |
| • தொழினுட்பப் பட்டமேற்படிப்பு (Professional PG) | ₹6,000 (விடுதி: ₹8,000) | |
| • ITI / பாலிடெக்னிக் படிப்பு | ₹1,000 (விடுதி: ₹1,200) | |
| 5 | திருமண உதவித்தொகை (குடும்பத்தில் இருமுறை மட்டும்) | |
| • ஆண் | ₹3,000 | |
| • பெண் | ₹5,000 | |
| 6 | மகப்பேறு உதவி | ₹6,000 |
| • கருச்சிதைவு / கருகலைப்பு | ₹3,000 | |
| 7 | கண்கண்ணாடி உதவி | ₹500 |
| 8 | முதியோர் ஓய்வூதியம் | ₹1,000 |