ஊடக வெளியீடுகள்

Anganvadi

அங்கன்வாடி மையங்களுக்கு கைபேசிகள்

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2019

கடலூர் மாவட்டத்தில் 2023 அங்கன்வாடி மையங்களுக்கு அதிநவீன கைபேசிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். கைபேசிகள் வழங்கிய விபரம் [ 41 kb ]

மேலும் பல
Rally

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2019

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார் பேரணியின் விபரங்கள். [114 Kb ]

மேலும் பல
All party meeting

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2019

வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் தொடர்பாக அனைத்த அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்ட விபரம் [86 Kb]

மேலும் பல
NE monsoon meeting

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2019

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்பொருட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (10.09.2019) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் விபரம்  [ 537 Kb]

மேலும் பல
Jalsakthi Abyan

ஜல்சக்தி அபியான் இயக்க ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 30/08/2019

ஜல்சக்தி அபியான் இயக்க ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நீர் வள இயக்கத்தின் கீழ் (ஜல்சக்தி அபியான் இயக்கம்) நிலத்தடி நீர்வளம் பாதுகாத்தல் குறித்து ஆய்வுக்கூட்டம் மத்திய அரசு பிரதிநிதி வ.உ சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகம் தலைவர் திரு.டி.கே.ராமசந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (29.08.2019) நடைபெற்றது. ஆய்வுக்கூட்ட விபரம் [32 kb ]

மேலும் பல
Waterboides desilit work

கீராப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிமராமத்து பணிகள்

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2019

கடலூர் மாவட்டம் கீராப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.08.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் விபரங்கள் [ 33 Kb]

மேலும் பல
wedding for Differently able couples.

மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2019

மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சியில் 5 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சி [33 kb ]

மேலும் பல
மாவட்ட ஆட்சியரின் ஆய்வு

மாவட்ட ஆட்சியரின் நீர்நிலைகள் பணிகள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2019

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் ஏரி, குளங்கள் தூர்வாரும் பணிகளை 10 கி.மீ நடந்து சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீர் நிலைகள் பணிகள் ஆய்வின் வுபரம் [33.8 kb]  

மேலும் பல
Indipendance day Flang hoistaing

சுதந்திரதின விழா கொண்டாட்டங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2019

கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கடலூர் மாவட்டம், கடலூர் ஊராட்சி ஒன்றியம் திருவந்திபுரம் ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையாளராக கலந்து கொண்டார். சுகந்திரதின விழா கொண்டட்ட விபரங்கள் கிராமசபை […]

மேலும் பல
Maintaining of water bodies

சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் நீர்நிலைகள் தூர்வாரும் பணி

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் நகர சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் நீர்நிலைகள் தூர்வாரும் பணி துவக்க விழா கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (14.08.2019) நடைபெற்றது.

மேலும் பல