வருவாய்த்துறை
மாவட்ட நிர்வாகம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் இந்திய ஆட்சிப்பணி மூலம் நியமிக்கப்படுகிறார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவரின் நிர்வாகத்தின் கீழ் சட்டம் மற்றும் ஒழுங்கு, திட்டங்கள், வளர்ச்சி, பொது தேர்தல்கள், ஆயுத உரிமம் புதுப்பித்தல் போன்ற முக்கிய பிரிவுகள் உள்ளன. மாவட்ட வருவாய் அலுவலரின் கீழ் வருவாய்த்துறை செயல்படுகிறது. இவர் மாவட்ட துணை மாஜிஸ்ரேட்டாகவும் செயல்படுகிறார். மாவட்ட நுகர்பொருள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் சுரங்கம், கிராம அலுவலர்கள் நிர்வாகம் போன்ற துறைகள் மாவட்ட வருவாய் அலுவலரின் கீழ் செயல்படுகின்றன.
மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மாவட்ட வருவாய் அலுவலரும், துணை ஆட்சியர்களும் நிர்வாகத்தில் உதவிபுரிகின்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் முக்கியமாக மாவட்ட அளவில் பொது நிர்வாகத்தினையும், அன்றாட நிர்வாக பணிகளையும் மேற்பார்வையிடுகிறார். மேலும் வருவாய்த்துறையில் கோட்ட அளவில் வருவாய் கோட்டாட்சியர்களும், துணை ஆட்சியர்களும், வட்ட அளவில் வருவாய் வட்டாட்சியர்களும் மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.
வருவாய் நிர்வாகம்
கடலூர் மாவட்டம் நிர்வாக நலன் கருதி 3 வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருவாய் கோட்டமும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இயங்குகிறது.
வருவாய் கோட்டாட்சியர்கள் தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நிர்வாக நடுவர்களாக செயல்படுகின்றனர். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போலவே ஒத்த நி்ர்வாக அமைப்பினை கொண்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் இணைப்பு பாலமாக செயல்படுகிறது. ஒவ்வொரு வருவாய் கோட்டமும் தனத அதிகாரத்திற்குட்பட்ட வட்ட அலுவலகங்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றன.
வருவாய் கோட்டங்கள் நிர்வாக நலன் கருதி வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டத்திற்கும், வருவாய் வட்டாட்சியர் தலைவராக செயல்படுகிறார். மேலும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தி்ன் கீழ் பல வருவாய் குறு வட்டங்கள் செயல்படுகின்றன. அவை வருவாய் ஆய்வாளரால் நிர்வகிக்கப்படுகின்றன. வருவாய் நிர்வாகத்தில் கடைநிலையில் கிராம நிர்வாக அலுவலர்களும், கிராம உதவியாளர்களும் அரசுக்கு உறுதுணையாக நிர்வாகத்தில் உதவி புரிகின்றனர்.
வருவாய் கோட்டங்கள் | வட்டங்கள் | குறு வட்டங்கள் |
---|---|---|
கடலூர் | கடலூர் | மஞ்சகுப்பம் |
ரெட்டிசாவடி | ||
திருவந்திபுரம் | ||
பண்ருட்டி | பண்ருட்டி | |
நெல்லிகுப்பம் | ||
காடாம்புலியுர் | ||
மருங்கூர் | ||
குறிஞ்சிப்பாடி | குறிஞ்சிப்பாடி | |
குள்ளஞ்சாவடி | ||
சிதம்பரம் | சிதம்பரம் | ஒரத்தூர் |
திருவக்குளம் | ||
சிதம்பரம் | ||
புவனகிரி | பரங்கிபேட்டை | |
புவனகிரி | ||
சேத்தியாதோப்பு | ||
காட்டுமன்னார்கோயில் | மன்னார்குடி | |
உடையார்குடி | ||
புத்தூர் | ||
குமராட்சி | ||
ஸ்ரீமுஷ்ணம் | காவனூர் | |
திருமுட்டம் | ||
விருத்தாசலம் | விருத்தாசலம் | கம்மாபுரம் |
ஊமங்கலம் | ||
விருத்தாசலம் வடக்கு | ||
விருத்தாசலம் தெற்கு | ||
மங்கலம் கோ | ||
திட்டக்குடி | திட்டக்குடி கிழக்கு | |
பெண்ணாடம் | ||
திட்டக்குடி மேற்கு | ||
தொழுதூர் | ||
வேப்புர் | வேப்புர் | |
சிறுபாக்கம் |
வருவாய்த்துறை கீழ்க்கண்ட பரந்த குறிக்கோள்கள் அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டில்நடைமுறைபடுததப்படும்பல்வேறுதிட்டங்களின் பயன்களை சிறந்த முறையில்மக்களிடையே கொண்டு செல்வது.
- இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளித்தல்.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நிலங்களைப் பாதுகாத்து, முறையாக நில ஆவணங்கள் பராமரித்தல்
- நிலச்சீர்த்திருத்த சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேவையின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நிலம் வழங்குதல்.
இத்துறையானது விவசாயிகள், மாணவர்கள், வேலைவாய்ப்பில்லாதவர்கள், பணிபுரிபவர்கள், சமூகத்தின் அடித்தட்டு மக்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழிற்சாலை ஆகியோருக்கான சேவைகள் வழங்குவது மற்றும் தேவையான சான்றிதழ்களான சாதிச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், வருமான சான்றிதழ், நில உடமைகளில் உரிய திருத்தம் மற்றும் பல்வேறு உரிமங்கள் வழங்குவதன் மூலம் அவர்களின் மேம்பாட்டிற்கு இத்துறை வழிவகுக்கிறது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து வகையான தேர்தல்களிலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் பங்கு மகத்தானது.
இத்துறை தொடங்கப்பட்டது முதல், இயற்கை சீற்றம் மற்றும் மனித சக்தியால் ஏற்படும் அழிவுகளிலிருந்து மீட்பு பணியை முன்னின்று மேற்கொள்கிறது. இயற்கை சீற்றத்தின் போது பாதிக்கப்படும் மக்களை மீட்டு, நிவாரணம், மறுவாழ்வு மற்றும் குடியமர்த்துதல் பணிகளை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறை, பேரிடர் மேலாண்மை சம்மந்தமான எல்லா பணிகளையும் மேற்கொள்வதில் மையமாக விளங்குவதால் தமிழக அரசால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அலுவலக முகவரி விபரம்
மாவட்ட வருவாய் அலுவலர்
கடலூர் 607001,
தொலைபேசி – 04142 220492, 230185