முன்னாள் படைவீரர் நலம்
முன்னாள் படைவீரர் நலத்துறை :
இராணுவ படைவீரர்கள், படைப்பணியிலிருந்து வெளிவரும் வீரர்கள் மற்றும் படைப்பணியில் இறந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் 1919ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் படைவீரர் வாரியம் உருவாக்கப்பட்டது. பின்பு கடற்படை விமானப்படையினை இணைத்து முப்படைவீரர் வாரியமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசால் 1943ஆம் ஆண்டு மாவட்டந்தோறும் முப்படைவீரர் வாரியம் தொடங்கப்பட்டது. 1945 முதல் வேலைவாய்ப்புத்துறையின் துணை இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் இயங்கிவந்தது. 1968ஆம் ஆண்டு முழுநேர செயலாளர் நியமிக்கப்பட்டு 1974 வரை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் இயங்கிவந்தது.
26.10.1974 முதல் முன்னாள் படைவீரர் நல இயக்ககமாக பொதுத்துறையின்கீழ் மாநில அளவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பொதுத்துறையின் இணை/துணை/கூடுதல் செயலாளர் இத்துறையின் இயக்குநர் மற்றும் அரசு சார்பு அலுவலர் ஆவார்.
மேதகு ஆளுநர் அவர்களைப் புரவலராகக்கொண்டு மாண்புமிகு முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் தலைமையில் மாநில அளவில் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் நலன்களைப் பேணிட மாநில முப்படைவீரர் வாரியம் செயல்பட்டு வருகிறது. இதனில் தலைமைச்செயலாளர் துணைத்தலைவராகவும் செயல்படுவர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முப்படைவீரர் வாரியம் (Zila Sainik Boards) செயல்படுகிறது. 30 மாவட்டங்களில் இயங்கும் முப்படைவீரர் வாரியம் மூலமாக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதனில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், துணை/உதவி இயக்குநர்கள் செயலாளர்களாவும் செயல்படுவர்.
வஎண் | பதவி பெயர் | பணியிடம் | நிரப்பப்பட்டது | காலியிடம் |
---|---|---|---|---|
1 | உதவி இயக்குநர் | 01 | 01 | |
2 | கண்காணிப்பாளர் | 01 | 01 | |
3 | நல அமைப்பாளர் | 01 | 01 | |
4 | உதவியாளர் | 02 | 02 | |
5 | இள நிலை உதவியாளர் | 02 | 01 | 01 |
6 | தட்டச்சர் | 01 | 01 | |
7 | ஓட்டுநர் | 01 | 01 | |
8 | அலுவலக உதவியாளர் | 02 | 02 |