மீன்வளத்துறை
கடல் மீன்வள திட்டப்பணிகள் :
கடலூர் மாவட்ட கடற்கரை நீளம் 57.5 கிலோ மீட்டர். இதில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. கடல் மீனவ மக்கள் தொகை 47,000. இதில் 23,840 மீனவர்கள் நேரடியாக மீன்பிடித் தொழிலும், 15,000 மீனவ மகளிர் மீன்பிடிப்பு சார்ந்த தொழிலையும் செய்து வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் தற்சமயம் 235 மீன்பிடி விசைப்படகுகளும், 2345 கண்ணாடி நாரிழைப் படகுகளும் (உட்பொருத்தும்/வெளிப்பொருத்தும் இயந்திரம்) மீன்பிடித்தொழில்செய்து வருகிறது. கடலூர் விசைப்படகுகள் முடசல்ஓடை,சாமியார்பேட்டை,எம்.ஜி.ஆர்.திட்டு அன்னங்கோயில் மற்றம் பேட்டோடை ஆகிய மீன்பிடி தளங்களிலிருந்து மீன்பிடி தொழில் செய்துவருகிறது.இவற்றின் மூலம் ஆண்டுக்கு 25,000 டன் மீன்கள் பிடிக்கப்பட்டு உள்ளூரிலும், வெளி மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. அண்டை மாநிலம் கேரளாவுக்கு மீன்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடலு)ர் மாவட்டத்தில் 36 கடல் மீனவர் கூட்டுறவு சங்கங்களும், 41 கடல் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களும்,22 உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களும், 6 உள்நாட்டு மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களும் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் மீனவர்களுக்கான பல்வேறு அரசு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய கடல் மீனவர்/மீனவ மகளிர் சேமிப்பு நிவாரணத் திட்டம்
கடல் மீனவர் சேமிக்கும் பழகத்தை ஏற்படுத்தவும், மீன்பிடிப்பு குறைவாகவுள்ள புயல், மழை காலங்களில் வருவாய் ஏற்படுத்தவும் இத்திட்டம் மத்திய மாநில அரசுகளில் 50 :50 பங்களிப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினராக உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உட்பட்ட மீனவர்கள், ஜனவரி முதல் செப்டம்பர் வரை உள்ள ஒன்பது மாதங்களில் மொத்தம் ரூ.900/- சந்தாதொகை செலுத்த வேண்டும் . மீனவர்கள் செலுத்தும் சந்தாத்தொகைக்கு இணையாக மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.900/- வீதம் ரூ.1800/- ஐ வழங்கி மொத்தம் ரூ.2700/ம் ஒவ்வொரு மீனவ பயனாளிக்கும் வழங்கப்படும். இத்திட்டத்தினை போன்றே மீனவ மகளிருக்கு சேமிப்பு மற்றும் நிவாரணத்திட்டம் மாநில அரசு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீனவ மகளிர் செலுத்தும் சந்தாத் தொகைக்கு மாநில அரசு மட்டும் ரூ.1800/- வழங்கி மொத்தம் ரூ.2700/- ஒவ்வொரு வருக்கும் வழங்கப்படுகிறது.
2012-13 –ம் ஆண்டு முதல் 2017-18ஆம் ஆண்டு வரை பயனடைந்த பயனாளிகள் மற்றும் தொகை விபரம்.
ஆண்டு | பயனாளிகள் | செலவினத் தொகை (ரூ.இலட்சத்தில்) |
---|---|---|
2012-13 | 13846 | 249.22 |
2013-14 | 14946 | 269.03 |
2014-15 | 14980 | 404.46 |
2015-16 | 15065 | 406. 0 |
2016-17 | 15329 | 413.88 |
2017-18 | 15333 | 689.98 |
ஆண்டு | பயனாளிகள் | செலவினத் தொகை (ரூ.இலட்சத்தில்) |
---|---|---|
2012-13 | 12054 | 216.97 |
2013-14 | 14181 | 255.26 |
2014-15 | 13970 | 377.19 |
2015-16 | 13675 | 369.22 |
2016-17 | 14358 | 387.66 |
2017-18 | 14734 | 663.03 |
பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு வெளிப்பொருத்தும் இயந்திரம் வழங்கிட மானியத் திட்டம்.
இத்திட்டம் மத்திய மாநில அரசுகளின் சமவிகித பங்களிப்புத் திட்டமாகும். பாரம்பரிய மீன்பிடி கலன்கள் கடலில் அதிக து)ரம் சென்று மீன்பிடித்து விரைவில் கரை திரும்பவதற்கேற்ற வகையில் வெளிப்பொருத்தும் இயந்திரத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் (அதிக பட்சமாக ரூ.30,000/- வரை) மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மர கட்டு மரங்களும், பைபர் படகுகளும் பயனடைந்து வருகின்றன.
2012-13 –ம் ஆண்டு முதல் 2017-18ஆம் ஆண்டு வரை பயனடைந்த பயனாளிகள் மற்றும் தொகை விபரம்.
ஆண்டு | பயனாளிகள் | செலவினத் தொகை (ரூ.இலட்சத்தில்) |
---|---|---|
2012-13 | 111 | 30.89 |
2013-14 | ஒதுக்கீடு செய்யப்பட வில்லை | ஒதுக்கீடு செய்யப்பட வில்லை |
2014-15 | 38 | 11.40 |
2015-16 | ஒதுக்கீடு செய்யப்பட வில்லை | ஒதுக்கீடு செய்யப்பட வில்லை |
2016-17 | ஒதுக்கீடு செய்யப்பட வில்லை | ஒதுக்கீடு செய்யப்பட வில்லை |
2017-18 | 122 | ஒதுக்கீடு செய்யப்பட வில்லை |
மீன்பிடி படகுகளுக்கு எரியெண்ணெய்க்கான விற்பனை வரி விலக்களிக்கும் திட்டம்
மீன்பிடி படகுகளுக்கு விற்பனை வரி விலக்களிக்கப்பட்டு டீசல் வழங்கப்பட்டு வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் 204 விசைப்படகுகளும்,1225 பைபர் படகுகளும் பயன் பெறுகின்றன. விசைப்படகுகளுக்கும் மாதம் ஒன்றிற்கு தலா 1800 லிட்டர் வீதம் மீன்பிடி தடைக்காலம் நீங்கலாக வருடத்தில் 10 மாதங்களுக்கு டீசல் எரியெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய படகுகளுக்கு அதே போன்று (வெளிப்பொருத்தும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள்) மாதம் ஒன்றிற்கு தலா 350 லிட்டர் வீதம் வருடத்தில் 12 மாதங்களுக்கும் டீசல் வழங்கப்பட்டு வருகின்றது.
கடலோர மீனவ குடும்பங்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் மீன் இனப்பெருக்க காலத்தில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ள 45 நாட்களுக்கு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ குடும்பங்களுக்கு குடும்ப அட்டையின் அடிப்படையில் ரூ.2000/- வீதம் நிவாரணம் தமிழக அரசால் மீன்துறையின் மூலம் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வரப்படுகிறது.
கடலூர் வட்டத்தில் கடந்த 2012-13 முதல் பயனடைந்தவர்கள் விபரம்
ஆண்டு | பயனாளிகள் | செலவினத் தொகை (ரூ.இலட்சத்தில்) |
---|---|---|
2012-13 | 12042 | 240.84 |
2013-14 | 11017 | 220.34 |
2014-15 | 9076 | 181.52 |
2015-16 | 11169 | 223.38 |
2016-17 | 10874 | 217.48 |
2017-18 | 11139 | 555.95 |
2018-19 | 11073 | 553.65 |
கடலோர மீனவ குடும்பங்களுக்கான மீன்பிடி குறைந்த கால நிவாரணம்
மீன்பிடிப்பு குறைந்த பருவ காலமான அக்டோபர்,நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கடல் மீனவர்கள் பயன்பெறுவதற்கான சிறப்பு நிவாரணம் உதவித்தொகையாக தமிழக அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.4,000/- வீதம் மீன்துறையின் மூலம் வழங்கி வருகிறது.
ஆண்டு | பயனாளிகள் | செலவினத் தொகை (ரூ.இலட்சத்தில்) |
---|---|---|
2012-13 | 11902 | 476.08 |
2013-14 | 11377 | 455.08 |
2014-15 | 10625 | 425.00 |
2015-16 | 10733 | 429.32 |
2016-17 | 10560 | 528.00 |
2017-18 | 11683 | 584.15 |
மீன்பிடி கலன்களுக்கான இணையதள நேரடி பதிவு செய்தல்
தேசிய பாதுகாப்பு நலன் கருதி இந்திய அரசாங்கம், அனைத்து கடலோர மீனவர்களின் மீன்பிடிகலன்களை ஒரே மாதிரியான இணையதள நேரடி பதிவுமுறையினை மேற்கொண்டு மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி செயல்படுத்தும் திட்டமாகும். கடலூர் மாவட்டத்தில் இதுவரை இத்திட்டத்தின் கீழ் 295 மீன்பிடி விசைப்படகுகளுக்கும், 2,133 வெளிபொருத்தும் பைபர் படகுகள் இதுவரை இணையதள பதிவு மேற்கொள்ளப்பட்டு சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
கடல் மீனவர் / மீனவ மகளிர்களுக்கு உயிர் தொழில்நுட்ப அடையாள அட்டைகள் வழங்குதல்
கடலூர் மாவட்டத்தில் கடலோர மீனவர்களிடமிருந்து உயிர்தொழில்நுட்ப அடையாள அட்டை விண்ணப்பங்கள் 16,900 எண்ணம் பெறப்பட்டு அதன் அடிப்படையில் இதுவரை 15931 புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, 6,602 உயிர்தொழில்நுட்ப அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 20.06.2016 முதல் 01.07.2016 வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் விடுபட்ட ஆண்கள் 6535 மற்றும் பெண்கள் 11906-க்கும் உயிர் தொழில்நுட்ப அடையாள அட்டை வழங்கிட ஏதுவாக ஆண்கள் 5125 நபர்களுக்கும் பெண்கள் 12371 நபர்களுக்கும் புகைப்படம் எடுக்கும்பணி முடிவடைந்தது.
மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்கள்
எம்.ஜி.ஆர். திட்டு மீன்பிடி இறங்குதளம் தேசிய மீன்வளர்ச்சி மேம்பாட்டு வாரிய உதவியுடன் 2.93 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு 15.07.2015 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு மீனவர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
மீனவர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட கடலூர் மாவட்டத்தில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதி திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்திலுள்ள பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் மீன்பிடி இறங்குதளம் ரூ.18.91 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு மீனவ மக்களின் பயன்பாட்டில் உள்ளது. இவை தவிர கடலூர் மீன்பிடி துறைமுகம் ரூ.10.35 கோடி செலவிலும், முடசல்ஓடை மீன்பிட இறங்குதளம் ரூ.7.78 கோடி செலவிலும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை வெள்ளாறு முகத்துவாரம் நிலைப்படுத்தும் மேம்பாட்டு பணி ரூ.20.20 கோடி செலவில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
து)ண்டில் மூலம் Nரை மீன்பிடிப்பு மற்றும் செவுள் வலை பயன்படுத்தி புதிய மீன்பிடி விசைப்படகு கட்டும் மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்கும் திட்டம்.
அண்மைக்கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன்பிடி அழுத்தத்தை குறைத்திடவும் ஆழ்கடல் பகுதியில் செறிந்துள் மீனவள ஆதாரங்களை நீண்டகாலத்திற்கு பயன்படுத்திடவும், து)ண்டில் முலம் Nரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்ட ஆகும் செலவில் மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் (அதிகபட்சமாகரூ.30.0 இலட்சம்) வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 18 மீனவர்கள் அடங்கிய 5 குழுக்களுக்கு புதிய Nரை மீன்பிடி படகுகள் கட்டுவதற்கு பணி ஆணைகள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 15.07.2015 அன்று வழங்கி இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் மீனவ சமுதாயத்தை சேர்ந்தமுதல் மூன்று இடங்களிலும் வரும் 10-ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு சான்றிதழ் வழங்குதல்
ஆண்டு | பயனாளிகள் 10ம் வகுப்பு | பயனாளிகள் 12ம் வகுப்பு | செலவினத் தொகை |
---|---|---|---|
2011-12 | 6 | 2 | 19200 |
2012-13 | 6 | 2 | 19200 |
2013-14 | 7 | 2 | 25200 |
2014-15 | 7 | 2 | 19800 |
2015-16 | 9 | 9 | 94000 |
உள்நாட்டு மீனவர்களுக்கு வலை மானியம் வழங்கும் திட்டம்
கடலூர் மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களில் தெரிவு செய்யப்பட்ட 75 நபர்களுக்கு தேசிய வேளாண்மைஅபிவிருத்தித்திட்டத்தின்கீழ்வலை வாங்குவதற்கு மானியமாக தலா ரூ.7500/-வீதம் ரூ.5,62,500/- 2014-15-வருடத்தில்வழங்கிட ஆணை பெறப்பட்டத்தைத் தொடர்ந்து இதுவரை 75 பயனாளிகளுக்கு ரூ.5,62,500/- மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.தேசியவேளாண்மை அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் 275 செவுள் வலை வாங்குவதற்கு மானியமாக தலா ரூ.7500/- வீதம் ரூ.20,62,500/-ம் 170 வீச்சு வலை வாங்குவதற்கு மானியமாக 2500 வீதம் ரூ.4,25,000/- 2015-16-ம் வருடத்தில் வழங்கிட ஆணை பெறப்பட்டதைத் தொடர்ந்து பயனாளிகள் தெரிவு செய்து மானியம் வழங்கப்ட்டுள்ளது.
2017-18ம் ஆண்டு தேசிய வேளாண்மை அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் 100 செவுள் வலை வாங்குவதற்கு மானியமாக தலா ரூ10000/- வீதம் ரூ1000000/- வழங்கிட ஆணை பெறப்பட்டதைத் தொடர்ந்து பயனாளிகள் தெரிவு செய்து மானியம் வழங்கபட்டு வருகிறது
மீனவர் நலவாரியம்
தமிழக அரசு 2007-2008-ம் ஆண்டில் மீனவர்களின் சமூக பொருளாதார நலன் காக்க தமிழ்நாடு மீனவர் நலவாரியம் அமைத்துள்ளது. மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழில்கள் குறிப்பாக மீன் மற்றும் கருவாடு வியாபாரம் போன்ற தொழில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோர் இத்திட்டத்தில் உறுப்பினர்களாக சேர தகுதி உடையவராவார்கள்.
திட்டம் | தொகை |
---|---|
விபத்தினால் மரணம் | ரூ.1.00 லட்சம் |
இரு கைகளை இழந்தவர்களுக்கு | ரூ.1.00 லட்சம் |
இரு கால்களை இழந்தவர்களுக்கு | ரூ.1.00 லட்சம் |
ஒரு கை மற்றும் ஒரு கால் இழந்தவர்களுக்கு | ரூ.1.00 லட்சம் |
முழுமையாக இரு கண்பார்வை இழந்தவர்களுக்கு | ரூ.1.00 லட்சம் |
மீன்பிடிப்பின்போதுகடலில்காணாமல் போனவர்களின் வாரிசுதார்களுக்கு | ரூ.1.00 லட்சம் |
ஒரு கை அல்லது ஒரு கால் இழந்தவர்களுக்கு | ரூ.50,000/- |
உறுப்பினர்களின் மகன் மற்றும் மகள் கல்வி உதவித்தொகை | ரூ.6750 வரை |
திருமண உதவித்தொகை ஆண்கள் | ரூ.3,000/- |
திருமண உதவித்தொகை பெண்கள் | ரூ.5,000/- |
மகப்பேறு உதவித்தொகை | ரூ.6,000/- |
கருச்சிதைவு உதவித்தொகை | ரூ.3,000/- |
கருக்கலைப்பு உதவித்தொகை | ரூ.3,000/- |
கடலூர் மாவட்டத்தில் கடலூர் துறைமுக முகத்துவாரத்தினை ஆழப்படுத்துதல் மற்றும் து)ண்டில் வளைவு அமைத்தல்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர் துறைமுக முகத்துவாரத்தில் ஆழம் இல்லாத காரணத்தினால் மீன்பிடித்து திரும்பும் மீன்பிடி படகுகள் அடிக்கடி மண்ணில் சிக்கி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து மீன்பிடி படகுகளுக்கு சேதத்தையும் சில நேரங்களில் மீனவர்களுக்கு உடல் பாதிப்பும் மற்றும் உயிரிழப்பும் ஏற்படுகிறது.மேலும் இம்மாவட்ட மீனவர்கள் முகத்துவாரத்தினை ஆழப்படுத்தியும் து)ண்டில் வளைவு அமைத்து வழங்கிடவும் கோரி அவ்வப்போது போரட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2015-ம் மாதத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற விரைவில் நடவடக்கை மேற்கொண்டு பணி துவக்கப்படும் என தெரிவித்ததைத்தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்கள். எனவே, மீனவர்களின் வாழ்வாதாரம் முன்னேறவும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட ஏதுவாகவும் சம்பந்தப்பட்ட மத்திய மாநில துறைகளின் ஒத்துழைப்புடன் கடலூர் துறைமுக முகத்துவாரத்தினை ஆழப்படுத்தியும் து)ண்டில் வளைவு அமைத்தும் வழங்குவதும் மிகவும் அத்தியாவசியமானதும் அவசியமானதும் ஆகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அலுவலக முகவரி
மீன்துறை உதவி இயக்குநர்
மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம்
மீன்பிடி துறைமுக வளாகம்
கடலூர் 607301
உதவிக்கு அழைக்கும் எண்
மீன்துறை உதவிஇயக்குநர்
அலுவலக தொலைபேசி எண் 04142-238170
மீன்துறை துணை இயக்குநர் (மண்டலம்) கடலூர் 9384824217
மீன்துறை உதவி இயக்குநர் , கடலூர் 9384824251
மீன்துறை ஆய்வாளர்,பரங்கிப்பேட்டை 9384824358
மீன்துறை சார் ஆய்வாளர் கடலூர் 9384824506
மீன்துறை சார் ஆய்வாளர்,சிதம்பரம் 9384824508