மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்டநிர்வாக அமைப்பு
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் இந்திய ஆட்சிப்பணி மூலம் நியமிக்கப்படுகிறார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவரின் நிர்வாகத்தின் கீழ் சட்டம் மற்றும் ஒழுங்கு, திட்டங்கள், வளர்ச்சி, பொது தேர்தல்கள், ஆயுத உரிமம் புதுப்பித்தல் போன்ற முக்கிய பிரிவுகள் உள்ளன. மாவட்ட வருவாய் அலுவலரின் கீழ் வருவாய்த்துறை செயல்படுகிறது. இவர் மாவட்ட துணை மாஜிஸ்ரேட்டாகவும் செயல்படுகிறார். மாவட்ட நுகர்பொருள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் சுரங்கம், கிராம அலுவலர்கள் நிர்வாகம் போன்ற துறைகள் மாவட்ட வருவாய் அலுவலரின் கீழ் செயல்படுகின்றன.
மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மாவட்ட வருவாய் அலுவலரும், துணை ஆட்சியர்களும் நிர்வாகத்தில் உதவிபுரிகின்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் முக்கியமாக மாவட்ட அளவில் பொது நிர்வாகத்தினையும், அன்றாட நிர்வாக பணிகளையும் மேற்பார்வையிடுகிறார். மேலும் வருவாய்த்துறையில் கோட்ட அளவில் வருவாய் கோட்டாட்சியர்களும், துணை ஆட்சியர்களும், வட்ட அளவில் வருவாய் வட்டாட்சியர்களும் மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.
திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளா்ச்சி துறை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊராட்சிகள்) , நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி நிர்வாக இயக்குநர்கள் ஆகியோர் ஊரக வளா்ச்சித்துறையில் மாவட்ட ஆட்சியருக்கு உதவிபுரிகின்றனர்.
வ.எ | பிரிவு | தலைமை வகிப்பவர் | பொருள் |
---|---|---|---|
|
அ | அலுவலக மேலாளர் (பொது),
மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (பொது) |
அனைத்து நிலை பணியமைப்பு பணிநியமனம், மாறுதல்கள் மற்றும் அலுவலக நடைமுறை
|
2. | ஆ | மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (பொது),
தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை துறை) |
இயற்கை பேரிடர், வெள்ள நிவாரணம், இலவச வேட்டி சேலை வழங்குதல் கட்டிடம் உரிமம் புதுப்பித்தல் |
3. | சி | மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சட்டம்),
அலுவலக மேலாளர் (சட்டம்)
|
சட்டம், ஒழுங்கு, துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல், திரையரங்குகள் உரிமம் |
4 | டி | மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்),
தலைமை உதவியாளர்
|
ஊழியர்களின் ஓய்வுதியம், சிறப்பு சேம நிதி, வருடாந்திர ஊதிய உயர்வு, சம்பள பட்டியல் தயாரித்தல்
|
5. | ஜி | மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்),
தலைமை உதவியாளர் |
நலிவுற்ற கலைஞர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் ஓய்வுதியம். சாதி, வருமானம், இருப்பிடம் மற்றும் இதர சான்றிதழ்கள் மெய்த்தன்மை, பதிவறை மற்றும் தளவாட கோப்புகள் |
6. | எச் | மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (பொது),
தலைமை உதவியாளர் |
தபால் பிரிவு, நிலுவை கோப்புகள் விவரம் |
7. | ஐ | துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்),
தலைமை உதவியாளர்கள் |
மக்கள் குறை தீர்ப்பு மனுக்கள், முதியோர், விதவைகள், மாற்று திறனாளிகள் ஓய்வுதிய திட்டங்கள், உழவர் பாதுகாப்பு திட்டம் |
8. | ஜெ | துணை ஆட்சியர்,
தலைமை உதவியாளர் |
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை, அரசு மாணவர் விடுதி, இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் |
9. | கே | மாவட்ட வழங்கல் அலுவலர்,
நேர்முக உதவியாளர் |
பொது விநியோக திட்டம், அரிசி, மண்ணெண்ணை கைபற்றுகை, நுகர்பொருள் வழங்கல், குடும்ப அட்டை, |
10. | எல் | மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்),
தலைமை உதவியாளர் |
இரயில்வே, நெடுஞ்சாலை, சிப்காட், ஓ என் ஜி சி போன்ற துறைகளுக்கு நிலம் கையகப்படுத்தல் |
11. | எம் | .மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (பொது),
துணை வட்டாட்சியர் (வரவேற்பு), துணை வட்டாட்சியர் (தேர்தல்) |
தேர்தல்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் – தேர்வுகள், முக்கிய பிரமுகர்கள் வருகை , வாகன பராமரிப்பு |
12. | என் | மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (பொது) | இலங்கை அகதிகள் பராமரிப்பு |
13. | பி | மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்),
தலைமை உதவியாளர் |
அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டும் முன்பணம், நிதி ஒதுக்கீடு ஒத்திசைவு, மாநில கணக்காயர் தணிக்கை தடை பத்திகள் |
14. | ஆர் | உதவி ஆணையர் (கலால்)
நேர்முக உதவியாளர் |
மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை |
15. | எஸ் | வேளாண்மை துணை இயக்குநர்,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) |
விவசாய குறை தீர்ப்பு, பயிர் சாகுபடி, ஒத்திசைவு கூட்டம், பயிர் காப்பீடு திட்டம், கூட்டுப்பண்ணை, சிறுபாசனம் |
16. | வி | மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்),
தலைமை உதவியாளர் |
இலவச வீட்டுமனைப்பட்டா, வருவாய் வசூல் சட்டம், நிலமாற்றம், நில உரிமை மாற்றம், நில ஒப்படை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், பட்டா மேல்முறையீடு, புமிதான நிலங்கள் |
17. | டபில்யு | மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்,
கண்காணிப்பாளர் |
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பள்ளி, விடுதி, இலவச வீட்டுமனைப்பட்டா, கல்வி உதவி தொகை, வன்கொடுமை தடுப்பு சட்டம் |
18. | புவியியல் மற்றும் சுரங்க துறை | உதவி இயக்குநர் | கனிமம் மற்றும் சுரங்கம், சிறு மற்றும் பெருங்கனிமம், குவாரி, செங்கல் சூலை, மணல் குவாரி |