நெடுஞ்சாலைத்துறை
நெடுஞ்சாலைத்துறை – கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டம் :
அறிமுகம் :
கடலூர் மாவட்டத்தில் தொழிற்ச்சாலைகளின் உர்பர்த்திகள் தமிழ்நாட்டலவில் முக்கிய பங்கு வகிக்கிறது. நெடுங்சாலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் சாலைகள் மற்றும் மேம்பாலமங்களின் கட்டமைப்பு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு அளிக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலை கட்டமைப்புகளை நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பராமரிப்பு செய்யப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறையின் சாலை உட்கட்டமைப்பு திட்டங்களான சாலை அகலப்படுத்துதல், மறுகட்டமைப்பு செய்தல், மேம்பாடு செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மூலமாகவும் சாலைகள் மற்றும் பாலங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இவைகள் அனைத்தும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு அளிக்கிறது
கடலூர் நெடுஞ்சாலை, கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டத்தின் மூலம் சாலைகளின் தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் அளப்பரிய பணிகளை செய்து வருகிறது.
கடலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் மொத்தம் 1862.957 கி.மீ. நீளமுள்ள அரசு சாலைகளை கீழ்கண்ட இனம் வாரியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
மாநில சாலைகள் நீளம் 249.133 கி.மீ
மாவட்ட சாலைகள் நீளம் 448.619 கி.மீ.
இதர மாவட்ட சாலைகள் நீளம் 959.559 கி.மீ.
இதர மாவட்ட சாலைகள் கரும்பு சாலைகள் நீளம் 205.646 கி.மீ.
கடலூர் (நெ) க(ம)ப கோட்டத்தின் கட்டுப்பாட்டில் 7 உட்கோட்டங்கள் உள்ளன. அந்த உட்கோட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் அரசு சாலைகளின் விபரங்கள் பின்வருமாறு :
- கடலூர் உட்கோட்டத்தில் 220.645 கி.மீ சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
- பண்ருட்டி உட்கோட்டத்தில் 281.101 கி.மீ சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
- குறிஞ்சிப்பாடி உட்கோட்டத்தில் 353.359 கி.மீ சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
- விருத்தாசலம் உட்கோட்டத்தில் 272.225 கி.மீ சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
- திட்டக்குடி உட்கோட்டத்தில் 309.675 கி.மீ சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
- சிதம்பரம் உட்கோட்டத்தில் 177.548 கி.மீ சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
- காட்டுமன்னார்கோயில் உட்கோட்டத்தில் 246.404 கி.மீ சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது
சாதனைகள் :
- கடந்த 6 ஆண்டுகளில் 2011-2017 வரை (CRIDP) பரந்த சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 836.720 நீளமுள்ள சாலைப் பணிகள் மற்றும் 23 பாலம் மற்றும் சிறுபாலங்கள் ரூ. 476.27 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது.
- 2017-2018ம் ஆண்டு (CRIDP) பரந்த சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 70 பணிகள் ரூ. 58.59 கோடி மதிப்பீட்டில் 130.43 கி.மீ. நீளமுள்ள சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
- புதிதாக 97 பணிகள் ரூ. 90.00 கோடியில் எடுத்துக்கொள்ளப்பட்டு 50.00 கி.மீ. நீளமுள்ள 18 பணிகள் ரூ. 13.23 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளது
- 2017-2018 ஆண்டில் டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளச் சீரமைப்பு பணிகளுக்கு 3.58 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன
தகவல் அலுவலர்கள் | பெயர் | பதவி | அலுவலக தொலை பேசிஎண் | நிகரி எண் | மின்னஞ்சல் |
---|---|---|---|---|---|
பொது தகவல் அலுவலர் | ஜெ.கு.ரமேஷ்கண்ணா, எம்.டெக்., | கோட்டப் பொறியாளர் | 04142-294555 | 04142-295500 | tndehcmcuddalore[at]gmail[dot]com |
உதவி பொது தகவல் அலுவலர் | சு. சுரேஷ்பாபு | கோட்டப்கணக்கர் |
வ.எண் | அலுவலகத்தின் பெயர் |
உதவி பொது தகவல் அலுவலர் | பொது தகவல் அலுவலர் | மேல்முறையீட்டு அலுவலர் |
---|---|---|---|---|
1 | கடலூர் (நெ)
கோட்டம் |
கோட்ட
கணக்கர் |
கோட்டப்பொறியாளர் | கோட்டப்
பொறியாளர் |
2 | கடலூர் (நெ)
உட்கோட்டம் |
கண்காணிப்பாளர் | உதவி கோட்டப்
பொறியாளர், கடலூர் |
|
3 | பண்ருட்டி (நெ) உட்கோட்டம் | கண்காணிப்பாளர் | உதவி கோட்டப்
பொறியாளர், பண்ருட்டி |
|
4 | குறிஞ்சிப்பாடி (நெ) உட்கோட்டம் | கண்காணிப்பாளர் | உதவி கோட்டப்
பொறியாளர், குறிஞ்சிப்பாடி |
|
5 | விருத்தாசலம் (நெ) உட்கோட்டம் | கண்காணிப்பாளர் | உதவி கோட்டப்
பொறியாளர், விருத்தாசலம் |
|
6 | திட்டக்குடி (நெ) உட்கோட்டம் | கண்காணிப்பாளர் | உதவி கோட்டப்
பொறியாளர், திட்டக்குடி |
|
7 | சிதம்பரம் (நெ) உட்கோட்டம் | கண்காணிப்பாளர் | உதவி கோட்டப்
பொறியாளர், சிதம்பரம் |
|
8 | காட்டுமன்னார்
கோயில் (நெ) உட்கோட்டம் |
கண்காணிப்பாளர் | உதவி கோட்டப்
பொறியாளர், காட்டுமன்னார்கோயில் |
அலுவலக முகவரி விபரம்
முதன்மை பொறியாளர் (கோட்டம்),
நெடுஞ்சாலைத்துறை,
கடலூர் 607 001,
தொடர்பு எண். 04142-294555/295500