குடிமைப் பொருள்கள்
பொது விநியோகத்திட்டம் :
மாவட்டத்தில் தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவுபாது காப்பு விதிமுறைகளின் கீழ் பொது விநியோகத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் குறிக்கோள் குடும்ப அட்டை தாரா்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சா்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற சிறப்பு அத்தியாவசியப்பொருட்கள் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்குகிறது.
ஆய்வு மற்றும் கண்காணிப்பு அமைப்பு
மாவட்ட ஆட்சியர் , ஒவ்வொரு வாரமும் (திங்கட்கிழமை) பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதற்காக நியாய விலைக் கடைக்கு செல்லும் அத்தியாவசியமான பொருட்களை ஆய்வு செய்வார்கள்.
பொது விநியோகத்திட்டத்தின் நோக்கங்கள் :
- அத்தியாவசியமான பொருட்களின் விலை உயா்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து ஏழை எளியம க்களை பாதுகாக்கவும்,
- பருப்பு. சமையல் எண்ணெய் போன்ற வற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும்,
- மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கவும்,
- குடும்ப அட்டைதாரா்கள் அருகில் அமைந்துள்ள நியாயவிலைக்கடைகளை எளிதாக அணுகி அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்செல்லவும்,
- ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரா்களுக்கு சரியான நேரத்தில், அத்தியாவசிய/சிறப்பு அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் இத்திட்டம் பயன்படுகின்றது.
- மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம் மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்களின் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது.
- புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி இணையதளம் வாயிலாக பதியப்படும் மனுக்களின் மீது வட்ட வழங்கல் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலா்கள் தலத்தணிக்கை செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டு புதியமி ன்னணு குடும்ப அட்டை அச்சிட்டு நியாயவிலை கடைகள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது.
நுகா்வோர் பாதுகாப்பு :
- நுகா்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ஐ அடிப்படையாகக்கொண்டு நுகா்வோர் தொடா்புடைய பிரச்சினைகளுக்குதீா்வு காணல்.
- நோ்மையற்ற வணிக முறையினை பொருட்களின் உற்பத்தி மற்றும் சேவையினை தர ஆய்வின்வாயிலாக கண்ணுற்று நுகா்வோர் நீதிமன்றங்கள் வாயிலாக தீா்வினை அறிதல்.
- கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் தன்னா்வ நுகா்வோர் அமைப்பு மூலமாக கல்லூரி மற்றும் அரசு மேனிலைப்பள்ளிகளில் நுகா்வோர் மன்றங்கள் தொடங்கப்பட்டு மாணவ, மாணவியா்களின் கலைநிகழ்ச்சிகள் மூலமாக பல்வேறு நோ்வுகளில் நுகா்வோர்களுக்கு விழிப்புணா்வு சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.
வ எண் | வட்டம் | கூட்டுறவு துறை | சுய உதவி குழு | மொத்தம் | மொத்த கடைகள் | |||
---|---|---|---|---|---|---|---|---|
பகுதி நேரம் | முழு நேரம் | பகுதி நேரம் | முழு நேரம் | பகுதி நேரம் | முழு நேரம் | |||
1 | புவனகிரி | 31 | 76 | 0 | 1 | 31 | 77 | 108 |
2 | சிதம்பரம் (வ) | 52 | 116 | 0 | 0 | 52 | 116 | 168 |
3 | கடலூர் (வ) | 87 | 102 | 0 | 1 | 87 | 103 | 190 |
4 | காட்டு மன்னார் கோவில் (வ | 31 | 107 | 0 | 0 | 31 | 107 | 138 |
5 | குறிஞ்சிபாடி | 68 | 75 | 0 | 0 | 68 | 75 | 143 |
6 | பண்ருட்டி (வ) | 110 | 90 | 0 | 1 | 110 | 91 | 201 |
7 | ஸ்ரீமூஷ்ணம் | 28 | 40 | 0 | 2 | 28 | 42 | 70 |
8 | திட்டக்குடி (வ) | 29 | 105 | 0 | 4 | 29 | 109 | 138 |
9 | வேப்பூர் வட்டம் | 18 | 49 | 0 | 0 | 18 | 49 | 67 |
10 | விருத்தாசலம் (வ) | 60 | 133 | 0 | 0 | 60 | 133 | 193 |
மொத்தம் | 514 | 893 | 0 | 9 | 514 | 902 | 1416 |
வ எண் | வட்டம் | அரிசி | சர்க்கரை | அண். அரிசி | எப்பொருளும் வேண்டாதோர் அட்டை | காவாலர் அட்டை | மொத்த அட்டை |
---|---|---|---|---|---|---|---|
1 | புவனகிரி | 46952 | 335 | 8151 | 35 | 70 | 55543 |
2 | சிதம்பரம் (வ) | 64418 | 2740 | 7442 | 80 | 159 | 74839 |
3 | கடலூர் (வ) | 97415 | 4640 | 10161 | 20 | 783 | 113019 |
4 | காட்டு மன்னார் கோவில் (வ | 44852 | 331 | 6753 | 5 | 65 | 52006 |
5 | குறிஞ்சிபாடி | 60785 | 6065 | 7945 | 8 | 123 | 74926 |
6 | பண்ருட்டி (வ) | 89596 | 1135 | 16445 | 316 | 167 | 107659 |
7 | ஸ்ரீமூஷ்ணம் | 25935 | 130 | 4012 | 409 | 37 | 30523 |
8 | திட்டக்குடி (வ) | 54035 | 571 | 8410 | 805 | 30 | 63851 |
9 | வேப்பூர் வட்டம் | 24374 | 51 | 6277 | 163 | 9 | 30874 |
10 | விருத்தாசலம் (வ) | 84947 | 1781 | 9476 | 2 | 120 | 96326 |
மொத்தம் | 593309 | 17779 | 85072 | 1843 | 1563 | 699566 |
மொத்த குடும்ப அட்டைகள் | மொத்த வாடிக்கையாளர்கள் | மொத்த ஆதார் பதிவு எண்கள் | மொத்த மொபைல் பதிவு எண்கள் |
---|---|---|---|
699566 | 2503232 | 2308923 | 688353 |
அண். அட்டைகள் | அண். பயனாளிகள் | மாற். அட்டைகள் | மாற். பயனாளிகள் | மொத்த குடும்ப அட்டைகள் | மொத்த வாடிக்கை யாளர்கள் |
---|---|---|---|---|---|
85069 | 332009 | 375559 | 1349945 | 460628 | 1681954 |
அத்தியாவசிய பொருட்கள் தேவை விபரம்
அரிசி : 11908 மெட்ரிக் டன்
அண். அரிசி : 14886 மெட்ரிக் டன்
சமுபா. அரிசி : 13 மெட்ரிக் டன்
சர்க்கரை : 1189 மெட்ரிக் டன்
கோதுமை : 3394 மெட்ரிக் டன்
மண்ணெண்ணய் : 1615 கி. லி.
பொது விநியோகத்திட்டம்
தமிழக அரசு அத்யாவசிய பொருட்கள் மானிய விலையில் நியாய விலையில் நியாய விலை கடை மூலம் பின்வருமாறு விற்பனை செய்யப்படுகிறது.
வ. எண் | பொருள் | விலை (கி) | அளவு |
---|---|---|---|
(1) | (2) | (3) | (4) |
1. | பு அரிசி மற்றும் ப அரிசி | விலையில்லமல் | 1 அலகு 12 கிலோ.
1.5 அலகு 14 கிலோ. 2 அலகு 16 கிலோ. 2.5 அலகு 18 கிலோ. 3 மற்றும் 4 20 கிலோ. மேலும் 5 அலகு 5 கிலோ ஒரு அலகுக்கு |
2 | கோதுமை | ரூ.7.50/- | 5 கிலோ |
3 | சர்க்கரை | ரூ.25/- | 500 கிராம் ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு.
சர்கரை விருப்ப குடும்ப அட்டைக்கு மேலும் 3 கிலோ சர்கரை அரிசிக்கு பதிலாக. |
4 | அண். சர்க்கரை | ரூ.13.50/- | 500 கிராம் ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு. |
5 | மண்ணெண்ணய் | கிராமபுறம் ரூ.14.00
நகர்புறம் : ரூ.13.90 |
வழக்கமான
மாநகராட்சி 10 லி. நகராட்சி 6 லி. பேருராட்சி 3 லி. கிராம ஊராட்சி 3 லி. எ.ஓ.எப் மாநகராட்சி 3 ஒய்பி. நகராட்சி 3 ஒய்பி. பேருராட்சி 3 ஒய்பி. கிராம ஊராட்சி 3 ஒய்பி. |
6 | சிறப்பு அத்தியாவசிய பொருட்கள்; | துவரம் பருப்பு ரூ.30/-.
பாமயில் ரூ.25/- |
1 கிலோ.
1 லி. |
1.10.2008 முதல் காவலர் குடும்பங்களுக்கு பொது விநியோக திட்டம் மூலம் பின்வரும் விற்பனை செய்யப்படுகிறது.
திருமணமாகதவர் : 1 அலகு
பெற்றோருடன் வசிப்பவர் : 2 அலகு
திருமணமாகி குழந்தை இல்லாமல் வசிப்பவர் : 2 அலகு
திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசிப்பவர் : 3 அலகு
திருமணமாகி இரண்டு குழந்தையுடன் வசிப்பவர் : 4 அலகு