உள்ளுா் திட்ட குழுமம்
கடலூா் உள்ளுா் திட்ட குழுமம்.
முகவுரை
கடலூா் உள்ளுா் திட்ட குழுமமானது நகா் ஊரமைப்புச்சட்டம் 1971 பிரிவு 10(1) –ன்படி அரசாணை எண்.1138 ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, நாள்.24.07.1974-ன் படி அறிவிப்பு செய்யப்பட்டு பிரிவு 28-ன்படி அரசாணை எண்.803, வீட்டு வசதி மற்றும் நகா்புற வளா்ச்சி துறை, நாள்.20.09.1984 ல் ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. மீண்டும் முழுமைத்திட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு அரசாணை எண்.257, வீட்டு வசதி மற்றும் நகா்புற வளா்ச்சி துறை, நாள்.05.02.1996 ல் மறு ஆய்வு ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது..
கடலூா் கூட்டு உள்ளுா் திட்ட குழும பகுதி கடலூா் நகராட்சி, கடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் 31 கிராமங்கள் மற்றும் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 2 கிராமங்கள் உள்ளடக்கி 144.66 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது.
வருங்கால மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளா்ச்சியினை கருத்தில் கொண்டு முறையற்ற வளா்ச்சியை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், திட்டங்கள் தயாரித்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.
1994-ம் ஆண்டு முதல் கடலூா் உள்ளுா் திட்ட குழும அலுவலகம் எண்.6/4 சீனிவாசன் தெரு, புதுப்பாளையம், கடலூா் இயங்கி வருகிறது.
துறையின் பிரதான பணிகள்
- முழுமைத்திட்டம் தயாரித்தல்
- விரிவு அபிவிருத்தி திட்டம் தயாரித்தல்
- மனைப்பிரிவுகளுக்கு தொழில்நுட்ப ஒப்புதல் அளித்தல்
- அனைத்து கட்டுமானங்களுக்கும் திட்ட அனுமதி மற்றும் ஒப்புதல் அளித்தல்
- நகா்ப்புற வளர்ச்சி திட்டங்கள் தயாரித்தல்
பின்பற்றப்படும் சட்ட விதிமுறைகள்
கடலூா் உள்ளுா் திட்ட குழும அலுவலகம் நகா் ஊரமைப்புச்சட்டம் 1971 –ன் கீழ் செயல்படுகிறது.
பின்பற்றப்படும் விதி மற்றும் வரன்முறைகள்
- நகராட்சி கட்டிட விதி 1972
- தமிழ்நாடு பொது மற்றும் பலமாடி கட்டிட விதி
- தேசிய கட்டிட குறியீடு
- ஊராட்சி கட்டிட விதிகள் 1997
- வளா்ச்சி கட்டுப்பாட்டு விதிகள் 2010
- முழுமைத்திட்டம் மற்றும் விரிவு அபிவிருத்தி திட்ட விதிகள்.
அதிகாரப்பகிர்வு
- நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் கட்டிடம் கட்ட கீழ்கண்டவாறு அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது.
- 4000 ச.அடி. (4 குடியிருப்புகள்), தரை தளம் மற்றும் முதல் தளம் குடியிருப்பு கட்டிடம்.
- 2000 ச.அடி. வரை (தனித்த வணிகக் கட்டிடம்) தரை தளம் மற்றும் முதல் தளம் வணிகக் கட்டிடம்
கடலூா் உள்ளுா் திட்டக்குழுமம் அதிகாரப்பகிர்வு
- 4000 ச.அடி முதல் 25,000 ச.அடி – தரைகீழ்தளம் மற்றும் 4 தளங்கள் (குடியிருப்பு மற்றும் வணிகக்கட்டிடம்)
- தனிக்கட்டிடம் – தொழில் நிறுவனக்கட்டிடம்
- தரைதளம் மற்றும் 2 தளங்கள் – பள்ளிக்கட்டிடங்கள்
- தரைதளம் மற்றும் முதல் தளம் – கல்வி நிறுவன கட்டிடங்கள்
- மனைப்பிரிவுகள் நகராட்சி பகுதியில் 5 ஏக்கா் வரையிலும், ஊராட்சி பகுதியில் 10 ஏக்கா் வரையிலும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
கடலூா் உள்ளுா் திட்டக்குழுமம்
தலைவா் :மாவட்ட ஆட்சியா்
உறுப்பினா் செயலா் :நகா் ஊரமைப்புத் துறையின் துணை இயக்குநர்,உதவி இயக்குநா்
உறுப்பினா்கள் : குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினா்,கட்டிடக்கலை வல்லுநா்,பொது நலவாதி,
ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா்கள் -2,நகராட்சி வார்டு உறுப்பினா்கள் -2
உள்ளுா் திட்டக்குழும கூட்டம் :இரு மாதங்களுக்கு ஒரு முறை
கடலூா் உள்ளுா் திட்டக்குழுமத்தில் அமையும் உள்ளாட்சிகள்
கடலூா் பெருநகராட்சி
கடலூா் ஊராட்சி ஒன்றியம்
-
- திருமாணிக்குழி
- இராமாபுரம்
- மாவடிப்பாளையம்
- ஓட்டேரி
- செஞ்சிகுமாரபுரம்
- தோட்டப்பட்டு
- நத்தப்பட்டு
- கோண்டூா்
- வெளிச்செம்மண்டலம்
- பெரியகங்கணாங்குப்பம்
- சின்னகங்கணாங்குப்பம்
- உச்சிமேடு
- சுபஉப்பலவாடி
- குண்டுஉப்பலவாடி
- கூத்தப்பாக்கம்
- பாதிரிக்குப்பம்
- திருவந்திபுரம்
- குமாரப்பேட்டை
- அரிசிபெரியாங்குப்பம்
- கருப்படித்துண்டு
- கறையேரவிட்டக்குப்பம்
- வெட்டுக்குளம்
- கடலூா் ஓடி
- பொன்னியாங்குப்பம்
- பச்சையாங்குப்பம்
- குடிகாடு
- காரைக்காடு
- சேடப்பாளையம்
- அன்னவல்லி
- கங்கமாநாயக்கன்குப்பம்
- செம்மாங்குப்பம்
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம்
-
- தொண்டமாநத்தம்
- தியாகவல்லி.