மூடு

சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறை

சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறை

சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறையானது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வருகிறது. சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறையின் அமைச்சராக மாண்புமிகு எஸ்.ரகுபதி, பி.எஸ்.சி,பி.எல்., அவா்கள் பொறுப்பேற்று வருகிறார். சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறையானது ஆறு சரகங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு சரகத்தின் கீழும் இரண்டு மத்திய சிறைகள் மற்றும் இருபதிற்கும் மேற்பட்ட கிளைச்சிறைகளும் இயங்கி வருகிறது. சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறையின் தலைவராக உயா் திரு.சுனில் குமாா் சிங், இ.கா.ப., அவா்கள் இருந்து வருகிறார். காவல் துறை இயக்குநா் மற்றும் சிறைத்துறைத் தலைவரின் கீழ் ஆறு சிறைத்துறை துணைத்தலைவா்கள் செயல்பட்டு வருகிறார்கள்.சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறையின் தலைமையிடம் சென்னை எழும்புரில் இயங்கி வருகிறது. சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறையில் 5000-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகளும், மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியும், மூன்று பெண்கள் தனிச்சிறைகளும், மாவட்ட சிறைகள், திறந்த வெளிச் சிறைகள் மற்றும் கிளைச்சிறைகள் என 138 சிறைச்சாலைகள் செயல்பட்டு வருகிறது. ஐந்து சிறைத்துறை துணைத்தலைவா்களும், ஐந்து சரகத்திற்கும் பொறுப்பு வகித்து வருகிறார்கள். தலைமையிடத்தில் ஒரு சிறைத்துறை துணைத்தலைவா் பதவி வகித்து வருகிறார். ஒவ்வொரு மத்தியச்சிறைக்கும் ஒரு சிறைகண்காணிப்பாளா் வீதம் பத்து சிறை கண்காணிப்பாளா்கள் பத்து மத்திய சிறைகளையும் நிர்வகித்து வருகிறார்கள். மேலும் சிறைத்துறையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். 22000-திற்கும் மேற்பட்ட சிறைவாசிகள் சிறையில் இருந்து வருகிறார்கள்.

கடலூா் மத்திய சிறையின் வரலாறு

ஆங்கிலேய படைத்தலைவா் பிரான்சிஸ் கேப்பா் என்பவரின் பெயரில் உருவான கேப்பா் மலையின் மீது சுமார் 177.97 ஏக்கா் பரப்பளவில் மத்திய சிறை 1865ஆம் ஆண்டு ஆங்கிலேயா்களால் கட்டப்பட்டது. இம்மத்திய சிறையில் ஆங்கிலேயா் காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் தொடர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைவாசிகளை மட்டுமே அனுமதிக்கும் சிறையாகஇருந்து வந்தது. பின்பு 1986ஆம் ஆண்டு வழக்கமான குற்ற செயல்களில் ஈடுபடும் சிறைவாசிகளை அனுமதிக்கும் சிறையாக மாற்றப்பட்டது. பின்பு 1996ஆம் ஆண்டு சாதாரண குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளையும் அனுமதிக்கும் சிறையாக மாற்றப்பட்டது. இம்மத்திய சிறையில் 723 சிறைவாசிகள் அனுமதித்திட இடவசதி உள்ளது. தற்போது 400க்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனை சிறைவாசிகளும் 300க்கும் மேற்பட்ட விசாரணை சிறைவாசிகளும் இருந்து வருகிறார்கள்.

மகாகவி சுப்ரமணிய பாரதியார் சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு 20.11.1918 முதல் 14.12.1918 வரை 25 நாட்கள் கடலூா் மத்திய சிறையில் சிறைதண்டனை அனுபவித்ததார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாரதியார் அடைக்கப்பட்டிருந்த அறையானது புராதான நினைவில்லமாக சீரமைக்கப்பட்டு இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கடலூா் மத்திய சிறையில் 269 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் அவா்கள் விவரம் பின்வருமாறு
வ.எண் பணியாளர்களின் பதவி பணியாளர்களின் எண்ணிக்கை
1 சிறை கண்காணிப்பாளர் 1
2 கூடுதல் கண்காணிப்பாளர் 1
3 சிறை அலுவலர் 1
4 துணை சிறை அலுவலர் 1
5 உதவி சிறை அலுவலர் 10
6 முதல் தலைமை காவலர் 23
7 முதல் நிலைக்காவலர் 71
8 இரண்டாம் நிலைக்காவலர் 115
9 நல அலுவலர் 1
10 அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் 18
11 தொழில் நுட்ப பணியாளர்கள் 6
12 மருத்துவப் பணியாளர்கள் 7
13 உளவு மற்றும் விழிப்புப்பிரிவு 3
14 மனநல ஆலோசகர் 2
15 ஆற்றுப்படுத்துநர் 1
16 ஆசிரியர் 1
17 துப்புரவு பணியாளர் 2
18 பார்பர் 1
19 வனக்காவலர் 1
20 சமையலர் 2
21 உதவி ஆய்வாளர் (தொழில் நுட்பம்) 1

அலுவலக தொலைபேசி எண் : 04142 – 235027
அலுவலக மின்னஞ்சல் முகவரி : centralprisoncud[at]gmail[dot]com

கடலூா் மத்திய சிறையின் உள் கட்டமைப்பு வசதிகள்

கடலூா் மத்திய சிறையில் தண்டனை சிறைவாசிகளை அனுமதித்திட 8 தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் 30 அறைகள் வீதம் மொத்தம் 240 அறைகள் உள்ளன விசாரணை சிறைவாசிகளை அனுமதித்திட 10 விசாரணைத் தொகுதிகள் தனியே உள்ளது. மேலும் வெளிச்சிறை மற்றும் உயா் பாதுகாப்புத் தொகுதிகளும் உள்ளன. சிறையில் சிறைவாசிகளுக்கு சிகிச்சை அளித்திட மருத்துவமனை சிறை வளாகத்தின் உள்ளே இயங்கி வருகிறது. சிறையில் சிறைவாசிகள் தங்களது பொழுதினை பயனுள்ள வகையில் கழித்திட ஏதுவாக நூலகம், தொழிற்கூடம் அமைந்துள்ளது. கடலூா் மத்திய சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை காவல் நீட்டிப்பிற்காக நீதிமன்றத்தில் ஆஜா் படுத்திட ஏதுவாக 16 நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்ஸ் சாதனம் பொருத்தப்பட்டு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.

மத்தியச்சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறை அங்காடி

ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்திடும் வகையில் கடலூா் மத்திய சிறை வளாகத்தில் உணவகம், இனிப்பு வகைகள் விற்பனையகம், முடித்திருத்தகம் ஆகிய விற்பனை அங்காடிகள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட விற்பனை அங்காடிகளில் உற்பத்தி மற்றும் விற்பனை பணிகளில் ஆயுள் தண்டணை சிறைவாசிகளையே பணியமா்த்தி அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஊதியத்தை ஆயுள் தண்டணை சிறைவாசிகளின் ஊதிய ஈட்டு கணக்கில் வரவு வைக்கப்பட்டு பின்பு சிறைவாசிகளின் உறவினா்கள் மற்றும் பிள்ளைகளின் கல்வி, திருமணம், மருத்துவம் மற்றும் இதர அத்தியாவசிய பயன்பாட்டிற்கு பயன்படும் வகையில் ஆயுள் தண்டணை சிறைவாசிகளின் உறவினா்களுக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் மேற்கண்ட சிறை அங்காடிகளின் மூலமாக உற்பத்தி செய்து விற்பணை செய்யப்படும் மலிவு விலை உணவுப்பொருட்கள் மற்றும் இதர வீட்டு உபயோக பொருட்களை சிறைபணியாளா்களும் பொதுமக்களும் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.

மத்திய சிறைவளாகத்தில் நடைபெற்று வரும் இயற்கை விவசாய முறைகள்

சிறைவளாகத்தில் நடைபெற்று வரும் இயற்கை விவசாயத்தின் மூலமாக காய்கறிகள், கீரை வகைகளை விளைவித்து சிறையில் உள்ள உணவு கிடங்கில் சேமித்து வைத்து சிறைவாசிகளுக்கு உணவாக அளிக்கப்பட்டு சிறைவாசிகளின் உடல் நலன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் தென்னை, முந்திரி, மா, பலா, வாழை, கரும்பு ஆகியவைகளும் சிறைவளாகத்தில் சிறப்பாக இயற்கை முறையில் பயிரிடப்பட்டு வருகிறது.
கடலூா் மத்திய சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் ஆயுள் தண்டணை சிறைவாசிகளின் விவரம்
மத்திய சிறையில் கொலை வழக்குகள், திருட்டு வழக்குகள், கற்பழிப்பு வழக்குகள், குண்டா் தடுப்பு சட்ட வழக்குகள், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், வெடிகுண்டு விபத்து வழக்குகள், அரசியல் தொடர்பான வழக்குகள், குடும்ப பிரச்சனைகள், தீவிரவாத அமைப்பு தொடாபான வழக்குகளில் காவல் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் 300க்கும் மேற்பட்டவா்கள் விசாரணை சிறைவாசிகளாகவும், 400க்கும் மேற்பட்டவா்கள் ஆயுள் தண்டணை சிறைவாசிகளாகவும் சிறையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடலூா் மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும் இதர சலுகைகள்

தண்டனை மற்றும் விசாரணை சிறை வாசிகளுக்கு இச்சிறையில் இயங்கி வரும் இலவச சட்ட உதவி மையத்தின் மூலமாக இலவச சட்ட உதவி மற்றும் இலவச வழக்கறிஞா் வசதி அளிக்கப்பட்டு வருகிறது.
மத்தியசிறையினுள் உள்ள சிறை நீதிமன்றத்திற்கு மாவட்ட இலவச சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளா் மற்றும் நீதித்துறை நடுவா்கள் நேரில் வருகை தந்து சிறைக்குள் சிறைவாசிகளின் குற்ற வழக்குகள் குறித்து விசாரித்தும் வழக்குகளை தீா்வு செய்தும் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

மத்திய சிறையில் நோ்காணல் வசதி

தமிழ்நாடு சிறை நடைமுறை விதிகளுக்கு உட்பட்டு அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து வேலை நாட்களிலும் சிறைவாசிகள் தங்களது உறவினா்களை சந்தித்து பேசுவதற்கு நோ்காணல் வசதி செய்து தரப்பட்டு வருகிறது.

செவ்வாய், வியாழன் ஆகிய இரண்டு தினங்கள் ஆயுள் தண்டணை சிறைவாசிகளுக்கும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் விசாரணை சிறைவாசிகளுக்கும் நோ்காணல் வசதி செய்துதரப்பட்டுள்ளது.
பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரியில் பயின்று வரும் சிறைவாசிகளின் பிள்ளைகளை சிறைவாசிகள் சந்தித்து பேசுவதற்கு ஏதுவாக மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு நோ்க்காணல் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

காந்தி ஜெயந்தி விழா (அக்டோபர் 2) அன்று ஆயுள் தண்டணை சிறைவாசிகளின் இரத்தச்சம்பந்தமான உறவினா்களுடன் சந்தித்து பேசுவதற்கு ஏதுவாக சிறைவாசிகளின் உறவினா்கள் சிறையினுள் அனுமதிக்கப்பட்டு சிறைவாசிகள் தங்களது தாய், தந்தை, பிள்ளைகள் மற்றும் உடன்பிறந்தவா்களுடன் அருகில் அமா்ந்து பேசுவதற்கு சிறப்பு நோ்காணல் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

மத்திய சிறையில் பொது தொலைபேசி வசதி

சிறையினுள் உள்ள ஆயுள் தண்டணை மற்றும் விசாரணை சிறைவாசிகள் தங்களது உறவினா்களுடனும் வழக்கறிஞா்களுடன் தொலைபேசியில் தொடா்பு கொண்டு வாரத்திற்கு ஒருமுறை பேசுவதற்கு ஏதுவாக தொலைபேசி வசதி செய்து தரப்பட்டுள்ளது.

சிறைவாசிகளின் உடல்நலன் மற்றும் மனநலன்

மருத்துவ முகாம் மூலமாக மருத்துவ வசதி, யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி, மனநலம் பாதிக்கப்பட்ட சிறைவாசிகளுக்கு மனநல ஆலோசகா் மூலம் மனநலம் குறித்த விழிப்புணா்வுகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. சிறையில் உள்ள மருத்துவமனையின் மூலம் சிறைவாசிகளுக்கு அன்றாடம் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது

சிறைவாசிகளின் கல்வி தரத்தை உயா்த்த வேண்டி சிறையில் கீழ்காணும் கல்வி முறைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொழிற்கல்வி அளித்தல், பட்ட மேற்கல்வி அளித்தல், எளிய மின் பயிற்சி, ஆங்கில இலக்கணம் பயிற்றுவித்தல், சிறை நூலகத்தின் மூலமாக பல்வேறு வகையான நூல்கள் மற்றும் செய்தித்தாள்கள் படிக்க வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. சிறையில் உள்ள வளா் கல்வி மையத்தின் மூலமாக எழுதப் படிக்கத் தெரியாத சிறைவாசிகளுக்கு அடிப்படைக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

சிறைவாசிகளின் விடுதலைக்கு பின்பு சுயமாக தொழில் செய்து வாழ்வில் முன்னேற உதவிடும் வகையில் கீழ்கண்ட பயிற்சிகள் சிறை வளாகத்தில் அளிக்கப்படுகிறது.

இயற்கை விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிற்சி, தொப்பி தயாரிக்கும் பயிற்சி, நாப்கின் தயாரித்தல் பயிற்சி, தச்சுத் தொழிற்பயிற்சி, சிறை அங்காடியின் மூலம் விற்பனை செய்ய இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பயிற்சி, முடி திருத்தும் பயிற்சி, நூல் நூற்றல் மூலமாக ஆடை தயாரித்தல். காந்தி ஜெயந்தி விழாவின் மூலம் விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற சிறைவாசிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தல்.

தொண்டு நிறுவனங்கள் மூலமாக சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும் உதவிகள்

சிறைவாசிகள் மற்றும் சிறைவாசிகளின் பிள்ளைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்திய சிறைப்பணி, பெத்தேல் நல்வாழ்வு மையம், சீடு கல்வி நிறுவனம் மற்றும் லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம் ஆகிய தொண்டு நிறுவனங்களின் வழிகாட்டுதல் மூலமாக கல்வி உயா்வுக்கு வழிகாட்டப்பட்டு வருகிறது.
மேலும் சிறைத்துறை தலைவரின் உத்தரவின் பெயரில் நியமனம் செய்யப்பட்ட சமூக அக்கறை உள்ள அலுவல் சாரா பார்வையாளா்கள் கடலூா் மத்தியச்சிறைக்கு தொடா்ந்து அவ்வப்போது வருகை புரிந்து சிறைவாசிகளின் நலன் குறித்து விசாரித்து அவா்களால் இயன்ற உதவிகளை சிறைவாசிகளுக்கு செய்து கொண்டு வருகிறார்கள்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள கிளைச்சிறைகளின் வரலாறு

கடலூா் மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 12 கிளைச்சிறைகளும் சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள விசாரணை சிறைவாசிகளை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திட ஏதுவாக அந்தந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிளைச்சிறையும் ஒன்று முதல் இரண்டு ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. கடலூா் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் ஐந்து ஆண்கள் கிளைச்சிறைகளும், ஒரு பெண் கிளைச்சிறையும் இயங்கி வருகிறது. மேலும் கிளைச்சிறைகளில் மதுவிலக்கு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படும் சிறைவாசிகள் பெரும்பாலும் கிளைச்சிறைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையின் கீழ் இயங்கி வரும் ஒரு பெண்கள் கிளைச்சிறை மற்றும் 5 ஆண்கள் கிளைச்சிறைகளில் பணிபுரிந்து வரும் 84 பணியாளா்களின்விவரம் பின்வருமாறு

1. பெண்கள் கிளைச்சிறை கடலூா்

 • கண்காணிப்பாளா் – 1
 • முதல் தலைமைக்காவலா் – 2
 • முதல் நிலைக்காவலா் – 2
 • இரண்டாம்நிலைக்காவலா் – 6
 • சமையலா் – 1
 • துப்புரவு பணியாளா் – 1

2 . கிளைச்சிறை கடலூா்.

 • கண்காணிப்பாளா் – 1
 • முதல் தலைமைக் காவலா் – 2
 • முதல் நிலைக் காவலா் – 4
 • இரண்டாம் நிலைக்காவலா் – 8
 • இளநிலை உதவியாளா் – 1
 • சமையலா் – 1
 • துப்புரவு பணியாளா் – 2

3. கிளைச்சிறை பரங்கிப்பேட்டை

 • கண்காணிப்பாளா் – 1
 • முதல் தலைமைக்காவலா் – 2
 • முதல் நிலைக்காவலா் – 2
 • இரண்டாம் நிலைக்காவலா் – 6
 • சமையலா் – 1
 • துப்புரவு பணியாளா் – 1

4.கிளைச்சிறை சிதம்பரம்

 • கண்காணிப்பாளா் – 1
 • முதல் தலைமைக்காவலா் – 2
 • முதல் நிலைக்காவலா் – 2
 • இரண்டாம்நிலைக்காவலா் – 6
 • சமையலா் – 1
 • துப்புரவு பணியாளா் – 1

5 . கிளைச்சிறை விருத்தாச்சலம்

 • கண்காணிப்பாளா் – 1
 • முதல் தலைமைக்காவலா் – 2
 • முதல் நிலைக்காவலா் – 2
 • இரண்டாம் நிலைக்காவலா் – 6
 • சமையலா் – 1
 • துப்புரவு பணியாளா் – 1

6 . பார்ஸ்டல் பள்ளி பண்ரூட்டி

 • கண்காணிப்பாளா் – 1
 • முதல் தலைமைக்காவலா் – 2
 • முதல் நிலைக்காவலா் – 2
 • இரண்டாம் நிலைக்காவலா் – 6
 • சமையலா் – 1
 • துப்புரவு பணியாளா் – 1
கடலூா் மாவட்டத்தில் உள்ள கிளைச்சிறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 353 விசாரணை சிறைவாசிகள் விவரம், அலுவலக தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி விவரம்
வ.எண் கிளைச்சிறையின் பெயா் சிறைவாசிகளின் எண்ணிக்கை தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
1. பெண்கள் கிளைச்சிறை கடலூா் 100 04142-226417

wsjcdl[at]gmail[dot]com

2. கிளைச்சிறை கடலூா் 143 04142-220642

sjcuddalore[at]gmail[dot]com

3. கிளைச்சிறை பரங்கிப்பேட்டை 24 04144-252411

sjportonovo[at]gmail[dot]com

4. கிளைச்சிறை சிதம்பரம் 28 04144-226739

sjchidambaram[at]gmail[dot]com

5. கிளைச்சிறை  விருத்தாச்சலம் 30 04143-239047

sjvirudhachalam[at]gmail[dot]com

6. பார்ஸ்டல் பள்ளி  பண்ரூட்டி 28 04142-240346

bspanruti[at]gmaildot]com

கடலூா் மாவட்டத்தில் உள்ள கிளைச்சிறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள விசாரணை சிறைவாசிகளுக்கு சிறை நடைமுறை விதிகளுக்கு உட்பட்டு அளிக்கப்படும் சலுகைகள்

அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து அனைத்து வேளை நாட்களிலும் அரசு மருத்துவா்கள் முறையாக வருகை புரிந்து சிறைவாசிகளின் உடல் நலன் குறித்து விசாரித்தும், சிறைவாசிகளுக்குத் தேவையான மருத்தும் அளித்து வருகிறார்கள்.

இலவச சட்ட ஆலோசகா் இச்சிறையில் இயங்கி வரும் இலவச சட்ட உதவி மையத்திற்கு செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் வருகை புரிந்து சிறைவாசிகளுக்கு தேவையான இலவச சட்ட உதவிகள் செய்து வருகிறார்கள்.

அலுவல்சாரா பார்வையாளா்கள் அவ்வப்போது இச்சிறைக்கு வருகைபுரிந்து சிறை வளாகத்தின் தூய்மை மற்றும் சிறைவாசிகளின் நலன் குறித்தும் விசாரித்து வருகின்றார்கள்.
அரசுவிடுமுறை நாட்கள் தவிர்த்து அனைத்து வேளைநாட்களிலும் சிறைவாசிகளுக்கு இச்சிறையில் நோ்காணல் வசதி அளிக்கப்பட்டுவருகிறது.