மூடு

நிலஅளவை துறை

நிலஅளவைப் பதிவேடுகள் துறை, கடலூர் மாவட்டம்

ஆணையரகம்

ஆணையர், நிலஅளவை மற்றும் நிலவரிதிட்டம், சென்னை-5 அவர்கள் துறை தலைவர் ஆவார். ஆவணங்களை பொறுத்தமட்டில் இணை இயக்குநர், மத்திய நிலஅளவை அலுவலகம், சென்னை அவர்கள் பொறுப்பு அலுவலர் ஆவார்.

மாவட்டம்

உதவி இயக்குநர், நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை, கடலூர் அவர்கள் மாவட்ட நிலையிலான நிர்வாக தலைமை அலுவலர் ஆவார். இவர் மாவட்டத்தில் அனைத்து நிலஅளவை பணிகள் மற்றும் ஆவணங்கள் பராமரித்தல் தொடர்பாக பணியிலுள்ள நிலஅளவர், குறுவட்ட அளவர், சார் ஆய்வாளர், துணை ஆய்வாளர், ஆய்வாளர், தொழில்நுட்ப மேலாளர் ஆகியோர்களின் பொறுப்பு அலுவலர் ஆவார். இவர் நிலம் தொடர்புடைய பணிகளில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். நிலஅளவை மற்றும் எல்லைகள் குறித்த சட்டம் 1923-ன்படி பணிகள் மேற்கொள்வார்.

அலுவலக தொலைபேசி எண் – 04142 – 232856

அலுவலக முகவரி :

மாவட்ட நிலஅளவை அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

இரண்டாம் தளம், அறை எண்.341,கடலூர்.

இ-மெயில் – adsurcud@nic.in

நிலஅளவை பிரிவு

கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய மூன்று கோட்டங்களுக்கும் ஆய்வாளர் பொறுப்பில், அலுவலர்கள் உள்ளனர். இதே போல் வட்ட அலுவலகத்தில் வட்டத்துணை ஆய்வாளர் தலைமையில் குறுவட்ட அளவர்கள், சார் ஆய்வாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளனர். இவர்களுடைய முக்கிய பணி நிலஅளவை தொடர்பான அனைத்து தாவாக்களுக்கும் தீர்வு காண்பது, நிலஅளவை கற்களை பராமரிப்பது ஆகும்.

பட்டா மாறுதல் பணிகள் இணையவழி மூலம் மனுக்கள் பெறப்படுகிறது. இம்மனுக்கள் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் செல்லாமல், அருகில் உள்ள பொதுசேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் இணையவழி மூலம் மனு செய்யலாம்.

தொழில்நுட்ப பிரிவு

தொழில்நுட்ப மேலாளர் தலைமையில் தொழில்நுட்ப பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவில் தலைமை வரைவாளர், முதுநிலை வரைவாளர், வரைவாளர் பணிபுரிகின்றனர். நிலஅளவை பரப்புகளை கணக்கிடுதல், நிலஅளவை ஆவணங்களை கணினிமயமாக்கல், மாவட்ட, வட்ட வரைபடங்கள் பராமரித்தல் இப்பிரிவின் பணிகளாகும். வரைபடம் விற்பனை பிரிவும் இங்கு இயங்கி வருகிறது.

நிர்வாக பிரிவு

கண்காணிப்பாளர் தலைமையில் நிர்வாக பிரிவு இயங்குகிறது. பணியாளர்களின் நலன்கள் இப்பிரிவில் பேணப்படுகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 :

நிர்வாக பிரிவிற்கு பொது தகவல் அலுவலர் கண்காணிப்பாளர், தொழில்நுட்ப பிரிவிற்கு பொது தகவல் அலுவலர் தொழில்நுட்ப மேலாளர், நிலஅளவை பிரிவிற்கு பொது தகவல் அலுவலர் ஆய்வாளர். இவர்களின் மேல்முறையீட்டு அலுவலர் உதவி இயக்குநர், நிலஅளவைப் பதிவேடுகள் துறை, கடலூர் ஆவார்.

நகர நிலவரித்திட்டம்

இம்மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகளில் தனி வட்டாட்சியர் தலைமையில் நிலவரித்திட்ட பணி நடைபெற்று பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

நிலஅளவை ஆவணங்கள் கணினிமயமாக்கல்

இம்மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் “அ” பதிவேடு மற்றும் சிட்டா கணினிமயமாக்கப்பட்டு இணையவழி மூலம் பொதுமக்கள் பார்வையிட்டு நகல் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நத்தம் மற்றும் நகர ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. புலப்படச் சுவடிகள் கணினிமயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. கணினி இணையதளவழி மூலம் இ-சேவை மையங்களில் நிலஅளவை பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு, இணையதள வழி மூலம் பட்டா மாற்றம் பணிகள் நடைமுறையில் உள்ளது.

குறுவட்ட அளவர் குடியிருப்பு

கடலூர் திருவந்திபுரம் குறுவட்டம், சிதம்பரம் குறுவட்டம், விருத்தாசலம் குறுவட்டம் ஆகிய குறுவட்ட அளவர்களுக்கு குடியிருப்புடன் கூடிய அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் எந்த நேரமும் குறுவட்ட அளவரை சந்திக்கலாம்.

மடிக்கணினி தகவல் அட்டை மற்றும் சிம் கார்டு வழங்கல்

இம்மாவட்டத்தில் அனைத்து வட்டத்துணை ஆய்வாளர்கள் மற்றும் குறுவட்ட அளவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அளவைப் பணி மேற்கொள்ளவும் புலத்திலேயே இணையவழி மூலம் ஆவணங்கள் பரிசீலித்து தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நில ஆவண மேலாண்மை மையம்

தேசிய நில ஆவணங்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய வட்டங்களில் நில ஆவண மேலாண்மை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் ஆவணங்கள் பார்வையிடுவது, சான்றுகள் பெறுவது மனுக்கள் அளிப்பது போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர் இயக்க குறிப்பு நிலையம்

தொடர் இயக்க குறிப்பு நிலையம் என்கிற மென் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதற்கான கட்டமைப்பு, கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மாடியிலும், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலக மாடியிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் துல்லிய அளவை பணி நவீன கருவிகளை கொண்டு மேற்கொள்ளப்படும்.

பணி நடைபெற உள்ள திட்டங்கள்

  • புலப்படங்கள் கணினிமயமாக்கல் (பரிசாத்த நிலையில் உள்ளது).
  • நத்தம், நகர ஆவணங்கள் கணினிமயமாக்கல் (பரிசாத்த நிலையில் உள்ளது).
  • நவீன கருவிகளை கொண்டு மறுநிலஅளவை பணி.
  • பத்திர பதிவு துறையுடன் – பட்டா மாறுதல் பணி இணைத்து இணையவழி சேவை.
முக்கிய அலுவலர் தொலைபேசி எண்கள்
வ. எண் பெயர் (திருவாளர்கள்) பதவி கைப்பேசி எண்
1 காலியிடம் உதவி இயக்குநர், மாவட்ட நிலஅளவை அலுவலகம், கடலூர் 04142-232856
2 த.சீனிவாசராகவன் கண்காணிப்பாளர், மாவட்ட நிலஅளவை அலுவலகம், கடலூர் 9994942854
3 எஸ்.சாந்தி தொழில்நுட்ப மேலாளர், மாவட்ட நிலஅளவை அலுவலகம், கடலூர். 9791552418
4 ஜி.திருநாவுக்கரசு ஆய்வாளர், விருத்தாசலம் 9940502424
5 கே.குணசேகரன் ஆய்வாளர், கடலூர் 9442441364
6 ட்டி.கார்த்திக்குமார் ஆய்வாளர், சிதம்பரம் 8122111547
7 டி.ராஜமகேந்திரன் வட்டத்துணை ஆய்வாளர், கடலூர் 9578315247
8 எம்.செந்தில்குமார் வட்டத்துணை ஆய்வாளர், குறிஞ்சிப்பாடி 8124289747
9 எ.நாராயணன் வட்டத்துணை ஆய்வாளர், பண்ருட்டி 9442150116
10 டி.வெங்கடேசன் வட்டத்துணை ஆய்வாளர், சிதம்பரம் 9944454948
11 ஆர்.ராமரகோத்தமன் வட்டத்துணை ஆய்வாளர், புவனகிரி 8608624059
12 கே.தண்டபாணி வட்டத்துணை ஆய்வாளர், விருத்தாசலம் 6380551862
13 எஸ்.சண்முகம் வட்டத்துணை ஆய்வாளர், திட்டக்குடி 8438258214
14 டி.நந்தகோபாலகிருஷ்ணன் வட்டத்துணை ஆய்வாளர், வேப்புர் 8248596538 – 9842615649
15 அ.சாகுல் அமீது வட்ட சார் ஆய்வாளர், காட்டுமன்னார்கோயில் 9787252425
16 ப்பி.சக்திவேல் வட்டத்துணை ஆய்வாளர், ஸ்ரீமுஷ்ணம் 9597788282