மூடு

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் நெ.5, பீச் ரோடு கடலூர் என்ற முகவரியில் தலைமையகமாக செயல்பட்டு கிராமப்புற நோய் தடுப்பு மற்றும் நோய் சிகிச்சைப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த துறையின் கட்டுப்பாட்டில் 63 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 7 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 319 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் 190 மருத்துவர்கள் மற்றும் 280 செவிலியர்கள் 325 பிற பணியாளர்கள்  ஆரம்ப சுகாதார நிலைய அளவில் பணியாற்றி வருகிறார்கள்.

 • 30 படுக்கை வசதியுடன் மேம்படுத்தப்பட்ட 19 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகிறது.
 • இரத்த சேமிப்பு 16 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுகிறது.
 • 21 ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடும்ப நல அறுவை சிகிச்சை அரங்கு செயல்படுகிறது.
 • 13 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் செயல்படுகிறது.
 • 26 பள்ளி சிறார் கண்காணிப்பு குழுக்கள் செயல்படுகிறது.
 • 12 ஆரம்ப சுகாதார நிலையங்கள் பல் மருத்துவர் கொண்ட குழுக்கள் செயல்படுகிறது.
 • 16 ஆரம்ப சுகாதார நிலையங்கள் எக்ஸ்-ரே வசதி செயல்படுகிறது.
 • மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இ.சி.ஜி , ஸ்கேன் மற்றும் ஆய்வக வசதி உள்ளது.
 • ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினசரி தோராயமாக 16,000 வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 • ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதந்தோறும் தோராயமாக 7500 உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 • ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதந்தோறும் தோராயமாக 350 பிரசவங்கள் நடைபெறுகிறது.
 • ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதந்தோறும் தோராயமாக 150 முதல் 175 குடும்ப நல அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

பொது சுகாதார துறையின் சிறப்புத் திட்டங்கள்

 1. எம்.ஆர்.எம்.பி.எஸ். (டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்) கர்பினி தாய்மார்களுக்கு முதல் இரண்டு பிரசவங்களுக்கு ருபாய் 18000/- பிரசவத்தின் போது ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் மரணத்தை தவிர்ப்பதற்காக வழங்கப்படுகிறது.
 2. JSY (ஜனனி சுரஷ்ஷ யோஜனா) மருத்துவ மனைகளில் நிகழும் பிரசவங்களுக்கு ரு.700/- பிரசவத்தின் போது ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் மரணத்தை தவிர்ப்பதற்காக வழங்கப்படுகிறது.
 3. ஜே.எஸ்.எஸ்.கே. (ஜனனி சிசு சுரக்க்ஷா கரியகாம்) பிரசவத்திற்கு முன் பின் இலவசமாக வாகன வசதி செயல்படுகிறது.
 4. WIFS  (வாராந்திர இரும்பு சத்து மாத்திரை கூடுதல்) வளர் இளம் பெண்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை இரும்புச்சத்து மாத்திரை ரத்த சோகை வராமல் தடுப்பதற்காக வழங்கப்படுகிறது.
 5. நடமாடும் மருத்துவ குழு, கிராமத்திற்கே நேரடியாகச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. (நெடுந்தொலைவு, கடினமாக பகுதி)
 6. மாதவிடாய் பஞ்சு வழங்கும் திட்டம். வளர் இளம் பெண்களுக்கு சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது.
 7. பள்ளி சிறார் நலத்திட்டம் பள்ளிகளுக்கு நேரடியாக ஆண் பெண் மருத்துவர் கொண்ட குழு பரிசோதனை செய்தல்
 8. 108 அவசர சேவைகள் முதல் உதவி, விபத்து, பிரசவத்திற்கு இலவச மருத்துவ மற்றும் வாகன வசதி
 9. 104 மருத்துவ சிக்சை உதவி எண் மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தல்
 10. பல் மருத்துவம் வெளி நோயாளிகளுக்கும் பள்ளி சிறார்களுக்கும் பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தல்
  • கண்னொளி காப்போம் திட்டம் கண் குறைபாடு உள்ள பள்ளி சிறார்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்குதல்
  • தொற்றாவகை நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சைத் திட்டம் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. (அம்மா ஆரோக்கியத்திட்டம்)
  • இரத்த சேமிப்பு அலகு அதிக இரத்த சோகை உள்ள கர்பினிகளுக்கு இரத்தம் செலுத்தப்படுகிறது.
  • தாய் சேய் இறப்பு ஆய்வு மாவட்ட ஆட்சியர் தலைமையில் தாய் சேய் இறப்பு குறைப்பதற்கான ஆய்வு நடைபெறுகிறது.
 11. தேசிய தடுப்பூசித் திட்டம் பிறந்த குழந்தை முதல் கர்ப்பினிகள் வரை நோய் வராமல் காப்பதற்காக தடுப்பூசி போடப்படுகிறது.
 12. தொற்று நோய் கண்காணிப்பு திட்டம் குறிப்பிட்ட பகுதியில் நோய் பரவுவதை கண்காணித்து நோய் பரவுவதை தடுக்கும் வழிமுறைகள் மேற்கொள்ளுதல்

அலுவலக  முகவரி மற்றும்  தொலைபேசி எண்கள்

துணை இயக்கநர் சுகாதாரப்பணிகள்

கடலுர் – 607001 .
அலுவலக தொலைபேசி எண்கள் – 04142-295134 – 04142 294134