மூடு

திரு.வே.ப.தண்டபாணி, இ.ஆ.ப

மாவட்ட ஆட்சியர் கடலுர்

மாவட்ட ஆட்சியர்

திரு.வே.ப.தண்டபாணி, இ.ஆ.ப, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நடுவர் அவர்கள் 2009ஆம் ஆண்டு தொகுப்பு இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் சென்னை பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் (வேதியியல்) பட்டமும், சென்னை பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப மத்திய நிறுவனத்தில் முதுகலைப் பட்டயமும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் மும்பை பல்கலைக் கழகத்தில் நகர்புற மேலாண்மையில் கூடுதல் முதுகலைப் பட்டயமும் (தங்க பதக்கம்) பெற்றவராவார். ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாக துறையில் மிகுந்த அனுபவமும் பெற்றவராவார்.  மேலும் திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி உபகோட்டத்தில் சார் ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளார். மீன்வளத் துறை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக இவர் பணிபுரிந்தபோது, திருச்சி மாநகரம் 2014ஆம் ஆண்டிற்கான சிறந்த மாநகராட்சிக்குரிய தமிழக அரசின் விருதினை பெற்றது. மேலும் சமூக பங்கேற்புடன் 22 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பசுமை பூங்காவிற்கு “ஸ்கோச்” விருதும் பெறப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு இந்திய அளவில் கணக்கெடுப்பு செய்யப்பட்ட 476 நகரங்களில் திருச்சி மாநகராட்சி இரண்டாவது தூய்மையான நகருக்குரிய தரத்தினை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 2011ஆம் ஆண்டு “தானே” புயல், 2016ஆம் ஆண்டு “வர்தா” புயல் மற்றும் 2017ஆம் ஆண்டு”ஒகி” புயல் நிவாரணப்பணிகளில் சிறப்பான சேவை புரிந்துள்ளார்.