மூடு

சிதம்பரம் நகராட்சி

துறை/பிரிவு பற்றிய தகவல்:

நிதித்துறை அரசாணை (எம்எஸ்) எண் 33 நாள் 25.03.1873-ன் படி இந்நகராட்சி மூன்றாம் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பிறகு நிதித்துறை அரசாணை (எம்எஸ்) எண் 2302 ஆர்டி மற்றும் எல்ஏ நாள் 11.04.1949-ன் படி இந்நகராட்சி இரண்டாம் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பிறகு நிதித்துறை அரசாணை (எம்எஸ்) எண் 1815 ஆர்டி மற்றும் எல்ஏ நாள் 09.08.1974-ன் படி இந்நகராட்சி முதல் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பிறகு 15.06.1998 முதல் தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நகரம் கடலூர் மாவட்த்திலுள்ள தாலுக்காவின் ஒன்றாக திகழ்கிறது.

துறை/பிரிவு பற்றிய தகவல்
தலைப்பு விபரம்
நகராட்சி சிதம்பரம் நகராட்சி
மண்டலம் செங்கல்பட்டு
தரம் தேர்வுநிலை நகராட்சி
முகவரி 2, கச்சேரி தெரு,சிதம்பரம் ,பின்கோடு : 608001
தொலைபேசி 04144 – 222231
மின்னஞ்சல் Commr[dot]chidambaram[at]tn[dot]gov[dot]in
பொது தகவல் :
விபரம் எண்னிக்கை
பரப்பளவு 4.80 சகிமீ
மொத்த வார்டுகள் 33
மொத்த தெருக்கள் 132
மொத்த தெருக்களின் நீளம் 66.025 கிமீ
மொத்த குடிநீர் குழாய்களின் நீளம் (கிமீ) 19.372 கிமீ
மொத்த பாதாள சாக்கடை நீளம் (கிமீ) 26 கிமீ
மொத்த திறந்தவெளி கழிவு நீர் பாதை நீளம் (கிமீ) 36.320 கிமீ
மொத்த பொது குடிநீர் குழாய்கள் 227
மொத்த வரிவிதிப்பு 13868
மக்கள் தொகை 2011 61153
மொத்த குடிநீர் இணைப்புகள் வீடுகள் – 6016

கடைகள் – 168

Total – 6184

மொத்த குடிநீர் தொட்டிகள் 4
மொத்த குப்பை அகற்றும் லாரிகள் 5
மொத்த துப்புரவு பணியாளர்கள் 129 (மொத்தம் -155)
மொத்த குப்பை தொட்டிகள் 67
மொத்த குப்பை சேகரிக்கும் இடம் மற்றும் அளவு 1 (4.80 சதுர ஏக்கர்)
மொத்த தெருவிளக்குகள் 1850
மொத்த பூங்காக்கள் 7
மொத்த நகராட்சி பள்ளிகள் 9
மொத்த நகராட்சி சத்துணவு மையங்கள் 9
வட்ட மற்றும் மாவட்ட தொடர்பு அலுவலர் விபரம்:
பெயர் / பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
திருமதி.எம்.அஜீதாபார்வின்,பி.எஸ்சி 
நகராட்சி ஆணையர்
7397382200 Commr[dot]chidambaram[at]tn[dot]gov[dot]in நகராட்சி அலுவலகம், சிதம்பரம்
திரு.எஸ்.மஹாராஜன்
நகராட்சி பொறியாளர்
9486682615 Commr[dot]chidambaram[at]tn[dot]gov[dot]in நகராட்சி அலுவலகம், சிதம்பரம்
திருமதி.A.விஜயலட்சுமி,  மேலாளர் 9003424833 Commr[dot]chidambaram[at]tn[dot]gov[dot]in நகராட்சி அலுவலகம், சிதம்பரம்
திரு.ஜி. ஆனந்தராஜலு, கணக்காளா் 9345607045 Commr[dot]chidambaram[at]tn[dot]gov[dot]in நகராட்சி அலுவலகம், சிதம்பரம்
திரு.கே.செந்தில்குமார், 
உதவி பொறியாளர்
9245145342 Commr[dot]chidambaram[at]tn[dot]gov[dot]in நகராட்சி அலுவலகம், சிதம்பரம்
திரு.அ.சலீம், மின் கண்காணிப்பாளா் 9245145342 Commr[dot]chidambaram[at]tn[dot]gov[dot]in நகராட்சி அலுவலகம், சிதம்பரம்
திரு.எஸ்.பக்கியநாதன் 
துப்புரவு ஆய்வர்
9942604465 Commr[dot]chidambaram[at]tn[dot]gov[dot]in நகராட்சி அலுவலகம், சிதம்பரம்
திரு.எம். கரிகால்சோழன்,

உதவி கணிணி திட்ட அலுவலர்

9442235163 Commr[dot]chidambaram[at]tn[dot]gov[dot]in நகராட்சி அலுவலகம், சிதம்பரம்

மின்னாளுமை

இந்நகராட்சியில் அனைத்து சேவைகளும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மின்னாளுமையால் செயல்படுத்தப்பட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணம், வரியில்லா இனங்கள், அச்சம் மற்றும் அருவருக்கதக்க இனங்கள், பிறப்பு, இறப்பு சான்றுகள், கட்டிட உரிம்ம் ஆகிய சேவைகள் மின்னாளுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வீட்டில் இருந்தபடியே சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றுகள் இணையதளம் மூலம் சான்றுகள் எடுப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளம் மூலம் விரைவாக அனைத்து சேவைகளும் பொதுமக்களே வீட்டில் இருந்தபடியே பெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செயல்படுத்தப்பட்டுள்ளது. (பொது மக்கள் இணைய வாயிலாக வரியினங்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகள்(31 டிசம்பர் 2017 வரை உள்ள பிறப்பு மற்றும் இறப்புகள் மட்டும்),கட்டிட அனுமதி, அச்சம் மற்றும் அருவருக்கதக்க இனங்களுக்குரிய அனுமதி பெற இணைய தள முகவரி https://tnurbanepay.tn.gov.in/)

நகரத்தை பற்றி விளக்கம்

இந்நகரம் பழமையான நகரமாகும். இங்கு புகழ்பெற்ற நடராஜர் ஆலயம் உள்ளது. இங்கு இந்தியாவிருந்தும் மற்றும் பல நாடுகளிலிருந்தும் பொதுமக்கள் இவ்வாலயத்திற்கு வருகை புரிகின்றார்கள். இந்த ஆலயத்தில் நடராஜர் நடனம் புரிந்த சிற்சபை உள்ளது. இந்த ஆலயம் கி.மு 6 முதல் 8 வரை உள்ள நூற்றாண்டுகளில் சோழ, பாண்டிய, விஜயராக அரசர்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக வரலாறு தெரிவிக்கிறது. மாணிக்கவாசகர் இவ்வாலயத்தில் வழிபட்டதாக புராணம் கூறுகிறது. சைவபுராணத்தில் இந்நகரம் தில்லை வனம் என்று கூறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆணடுக்கு இருமுறை திருவிழா நடைபெறுகிறது.

நகரம் அமைந்துள்ள இடம்

புவியியல் படி இந்நகரம் கிழக்கு அச்சரேகை படி 97-44-ம் வடக்கு அச்சரேகை படி 11 24-ம் அமைந்துள்ளது. இந்நகரம் வடக்கே 250 கிமீ தொலைவில் சென்னையும், 50கிமீ தொலைவில் கடலூரும், 75கிமீ தொலைவில் பாண்டிசேரியும் உள்ளது. மேற்கண்ட நகரத்திற்கு செல்ல அனைத்து சாலைகளும் தேசிய நெடுஞ்சாலைகளில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் சீர்காழி, மாயவரம் தெற்கு பக்கம் 20 கிமீ மற்றும் 40 கிமீ தொலைவில் உள்ளது. இந்நகரம் அனைத்து நகரத்திற்கும் புகைவண்டி அகலபாதை வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

முக்கிய இடங்கள்

நடராஜர் ஆலயம்

நடராஜர் ஆலயம் 43 ஏக்கர் நில பரப்பளவில் மூன்று பிரகாரங்களுடன் உள்ளடங்கியது. முதல் பிரகாரத்தில் நடராஜர் ஆலய்ம் உள்ளது. இரண்டாவது பிரகாரத்தில் தாயார் அம்மன் உள்ளது. மூன்றாவது பிரகாரத்தில் சிவகாமியம்மன் மற்றும் பாண்டியநாயகி அம்மன் உள்ளது.

தில்லைகாளியம்மன் ஆலயம்

இத்திருகோவில் நடராஜருக்கும் பார்வதிக்கும் நடந்த நடன போட்டியில் நடராஜர் வென்றதால் பார்வதி கோபம் கொண்டு ஊர் எல்லையில் கோவில் கொண்டுள்ளார். இந்தகோவில் கோப்பெருஞ்சோழனால் கட்டப்பட்டது.

இளமையாக்கினார் கோவில்

வயதான தோற்றதுடன் நோயின் பிடியிலிருந்த திருநீலகண்டநாயானார் தனது மனைவியுடன் கோவில் குளத்த்ல் நீராடியுடன் இளமை தோற்றத்தில் காட்சி அளித்தார் என்பது கோவில் வரலாறு. இத்திருகோவிலில் ஆண்டுக்கு இருமுறை திருவிழா நடைபெறுகிறது. இக்கோவிலில் காளபுலநாயனார் திருவிழா மற்றும் திருநீலகண்ட நாயனார் திருவோடு தரும் காட்சி திருவிழா ஆகியவை நடைபெறுகிறது.

திட்டங்கள் பற்றிய விளக்கம்

திட்டத்தின் பெயர் : விளக்கம் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு

துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு ரூ,200 லட்சத்தில் அம்பேத்கார் நகரில் கட்டப்பட்டுள்ளது. நிர்வாக அனுமதி 26.06.2013 –ம் தொழில்நுட்ப அனுமதி 30.09.2013-ம் அனுமதி கிடைத்த்து. மொத்த செலவினம் ரூ.174.46./ லட்சமாகும். குடியிருப்பு விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

திட்டத்தின் பெயர் : விளக்கம் – புதிய அலுவலக கட்டிடம்

ரூ.250./ லட்சத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நிர்வாக அனுமதி 25.06.2013-ம் தொழில்நுட்ப அனுமதி 13.08.2013-ம் கிடைத்த்து. மொத்த செலவினம் ரூ.250.- லட்சமாகும். பொதுமக்களுக்கும் அலுவலக ஊழியர்கள் பயன்பாட்டிற்கும் திறக்கப்பட்டது.

திட்டத்தின் பெயர் : யுனவர்சல் கழிப்பறை பல்வேறு இடங்களில் கட்டப்பட்டது

யுனிவர்சல் கழிப்பறை பல்வேறு இடங்களில் ரூ.13.00 லட்சத்திற்கு மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ளது. முத்துமாணிக்கம் தெரு, தில்லை காளியம்மன் கோவில் தெரு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனிதனியாக, மின் நகர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனிதனியாக கட்டப்பட்டுள்ளது.

திட்டத்தின் பெயர் : நகர்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனை

ரூ.48.00.- லட்சத்தில் சிதம்பரம் அண்ணாகலையரங்கத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. நிர்வாக அனுமதி 28.08.2015-ம் தொழில்நுட்ப அனுமதி 11.09.2015 அன்றும் கிடைத்த்து. மொத்த செலவினம் ரூ.48.00.- லட்சமாகும். கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் பெயர் : இயற்கை இடர்பாடுகள் நிதி 2015-16

இந்நகரில் இயற்கை இடர்பாடுகள் நிதியிலிருந்து 2015-16-க்கு ரூ.154.80 லட்சத்திற்கு சிங்காரதோப்பு, முத்துமாணிக்கம் தெரு, மன்மதசாமி தெரு, சுப்ரமணியன் தெரு, பதினாறுகால் மண்டப தெரு, இளமையாக்கினார் கோயில் குளம் கிழக்கு மற்றும் தெற்கு, கனகசபை நகர் 2-வது பிரதான சாலை, வீரபத்திரசாமி கோவில் தெரு, சோமசுந்தரம் தெரு, லால்கான் தெரு, ஆணிகாரன் தெரு, நேதாஜி தெரு, கொத்தங்குடி வடக்கு தெரு ஆகிய தெருக்களில் தார்ரோடுகள் மக்கள் பயன்பாட்டிற்கு போடப்பட்டது.

திட்டத்தின் பெயர் : சிறப்பு சாலைத்திட்ட நிதி 2015-16

இந்நகரில் சிறப்பு சாலைத்திட்ட நிதியிலிருந்து 2015-16 க்கு இரண்டு பேக்கேஜில் சாலை போடப்பட்டது. முதல் பேக்கேஜில் ரூ.201.60.- லட்சத்திற்கு பழைய புவனகிரி ரோடு முதல் திரௌபதியம்மன் கோவில் சந்திப்பு வரை, சிவசண்முகம் சந்திப்பு, பழைய புவனகிரி ரோடு முதல் சிவசண்முகம் சந்திப்பு வரை, ஆணிகாரன் தெரு, காயத்ரியம்மன் கோவில் கிழக்கு தெரு, குரு தெரு, ஆசிர்வாத் நகர், வாகீச நகர், காரியபெருமாள் தெரு, தில்லை நகர், மானா சந்து, சின்னகாஜியார் தெரு, பெரிய வாணிய தெரு, காசிமடம் தெரு, இபி இறக்கம் ரோடு, எல்லையம்மன் கோவில் மடவிளாகம் தெரு, தாகம் தீர்த்தபிள்ளையார் கோவில் தெரு ஆகிய தெருக்களுக்கு தார் சாலை மக்கள் பயனப்ர்ட்டிற்கு போடப்பட்டது.

இரண்டாவது பேக்கேஜ் ரூ.198.40.- லட்சத்திற்கு வெள்ளபிறந்தான் தெரு, கோவிந்தசாமி தெரு, கொத்தங்குடி தெரு, அண்ணா தெரு, பெருமாள் தெரு, மின் நகர், எடத்தெரு, தொப்பையான் தெரு, ஒமக்குளம் ரோடு, கனகசபை நகர் பாரதிதாசன் தெரு, ஞானபிரகாசம் தெரு ஆகிய தெருக்களுக்கு தார் சாலை மக்கள் பயன்பாட்டிற்கு போடப்பட்டது.

திட்டத்தின் பெயர் : பாதாளசாக்கடை திட்டம்

ரூ.75.62 கோடிக்கு புதிய பாதாளசாக்கடை திட்ட நிதியிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக கட்டப்பட்ட வருகிறது. 1900 இறங்கு குழிகள் கட்டப்பட்டுள்ளது. 4960 கழிவுநீர் சேகரிக்கும் குழிகள் கட்டி முடிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்குள் மக்களின் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்படும்.