மூடு

கல்வி

பள்ளிக் கல்வித் துறை :

கல்வி என்பது மனிதனை அனைத்து உயிரினங்களைவிட உயா்வான நிலையில் உருவாக்கும் கருவி ஆகும். கல்வி ஒரு சமூகத்தின் ஒருங்கிணைந்த அறிவு, திறன் மற்றும் மதிப்பீடுகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கொண்டு செல்ல உதவும் ஒரு காரணி, கல்வி குழந்தைகளை சுயமாக சிந்திக்கவும், புதியனவற்றை உருவாக்கவும், கற்பனைத் திறனை வளா்க்கவும், கலைநயம் மிக்க சிந்தனைத் திறனை உருவாக்கும் அற்புதக் கருவி ஆகும். ஒரு குழந்தையின் படைப்புத் திறனை உருவாக்குவதற்கும், அழகியலை ஆராதிப்பதற்கும் வழிகளையும், வாய்ப்புகளையும் வழங்கும். கல்வி நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய உலகத்தைப் பற்றிய உலகளாவிய அறிவை வழங்குகிறது. குழந்தைகளுக்கு செயல்பாடுகள் குறித்த சரியான புரிதல்களை கலவி வழங்குகிறது.

நோக்கம் :

 • குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியானது தரமானதாகவும், அனைவருக்கும் சமமானதாகவும் உலக அளவில் தேடிப் பெறும் வாய்ப்பை வழங்க வேண்டும்.
 • இந்திய அரசியலமைப்பின்படி அனைத்து உரிமைகளும் பெறும் வகையிலும். குழந்தைகளின் சிந்தனைத்திறன், படைப்பாற்றலை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையிலும் மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டம், மதீப்பீட்டு முறை அமைதல் வேண்டும்.
 • குழந்தைகள், அறிவு தங்களின் உள்ளார்ந்த அறிவாற்றல் மற்றும் உடல், மனம் ஆகியனை முழுமையான வளா்ச்சி பெறும் வகையில் கல்வி வழங்க வேண்டும்.
 • ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசிதகள் வழங்குவதோடு, குழந்தைகள் கற்கும் சூழல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் புதிதாக கண்டுபிடிக்கும் திறனை வெளிக் கொணரும் வகையில் கல்வி அமைதல் வேண்டும்.
 • குழந்தைகளின் படைப்பாற்றலை வளா்க்கும் வகையில் அவா்களின் தாய் மொழியில் கல்வி வழங்குதல் வேண்டும்.
 • குழந்தைகள் தங்களின் கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் வகையில் கல்வி அமைய வேண்டும். ஒரு குழந்தையின் அறிவு, தனித் திறன் மற்றும் குழந்தையின் உடல்நலன் மற்றும் மனநலனை முழுமையான முறையில் மேம்படுத்தும் வகையில் அமைதல் வேண்டும்.
 • குழந்தைகளுக்கு இறுதித் தோ்வானது அதிக நெகிழ்வுத் தன்மை மற்றும் வகுப்பறை சூழல் ஒருங்கிணைந்த தொடா் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையிலும், வளா்ச்சிப்படி நிலையில் எதிர்கால கனவுகள் மற்றும் இலக்குகளை அச்சமின்றி அடையும் வகையில் கல்வி அமைதல் வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறை :

 1. I. நிர்வாகம்
 2. II. பள்ளிகள்
 3. III. அரசு நலத்திட்டங்கள்

உயர்நிலைப் பள்ளி பட்டியல்[314 KB]

மேல்நிலைப் பள்ளி பட்டியல்[291 KB]

நிர்வாகம் :

கடலூர் மாவட்டத்தில் கல்வித் துறையின் முதன்மை மற்றும் தலைமை அலுவலகமாக முதன்மைக் கல்வி அலுவலகம் செயல்படுகிறது. இவ்வலுவலகம் கடலூர், மஞ்சக்குப்பம் பெண்ணையாறு சாலையிலுள்ள மஞ்சக்குப்பம் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது. இவ்வலுவலகத்தின் முதன்மை அதிகாரியாக முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) அவர்கள் விளங்குகிறார்.

முதன்மைக் கல்வி அலுவலர் :

அலுவலகத்தின் தொலைபேசி எண் : 04142 286038

அவர்களின் கைபேசி எண் : 7598779001

மேலும், 01.06.2018 முதல் நிர்வாக மேம்பாட்டு காரணமாக கடலூர் வருவாய் மாவட்டம் நான்கு கல்வி மாவட்டங்களாகப் பின்வருமாறு பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.

 1. மாவட்டக் கல்வி அலுவலகம், கடலூர்.
 2. மாவட்டக் கல்வி அலுவலகம், சிதம்பரம்.
 3. மாவட்டக் கல்வி அலுவலகம், வடலூர்.
 4. மாவட்டக் கல்வி அலுவலகம், விருத்தாசலம்.

மாவட்டக் கல்வி அலுவலகம், கடலூர் :

இவ்வலுவலகத்தின் தலைமை அலுவலராக மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) பொறுப்பு வகிக்கிறார்.

தொலைபேசி எண் 04142 – 296040

மேலும், இக்கல்வி மாவட்டம் 3 வட்டாரக் கல்வி அலுவலகங்களைக் கொண்டுள்ளது.அதன் அதிகாரிகளாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் (BEO) உள்ளனர்.

அவை,

 1. வட்டாரக் கல்வி அலுவலகம், கடலூர்
 2. வட்டாரக் கல்வி அலுவலகம், அண்ணாகிராமம்
 3. வட்டாரக் கல்வி அலுவலகம், பண்ருட்டி

மாவட்டக் கல்வி அலுவலகம், சிதம்பரம் :

இவ்வலுவலகத்தின் தலைமை அலுவலராக மாவட்டக் கல்வி அலுவலர் பொறுப்பு வகிக்கிறார்.

தொலைபேசி எண் 04144 – 238888

மேலும், இக்கல்வி மாவட்டம் 3 வட்டாரக் கல்வி அலுவலகங்களைக் கொண்டுள்ளது.அதன் அதிகாரிகளாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் உள்ளனர்.

அவை,

 1. வட்டாரக் கல்வி அலுவலகம், காட்டுமன்னார்கோயில்.
 2. வட்டாரக் கல்வி அலுவலகம், குமராட்சி.
 3. வட்டாரக் கல்வி அலுவலகம், பரங்கிப்பேட்டை.

மாவட்டக் கல்வி அலுவலகம், வடலூர் :

இவ்வலுவலகத்தின் தலைமை அலுவலராக மாவட்டக் கல்வி அலுவலர் பொறுப்பு வகிக்கிறார்.

தொலைபேசி எண் 04142 – 259870

மேலும், இக்கல்வி மாவட்டம் 3 வட்டாரக் கல்வி அலுவலகங்களைக் கொண்டுள்ளது.அதன் அதிகாரிகளாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் உள்ளனர்.

அவை

 1. வட்டாரக் கல்வி அலுவலகம், கீரப்பாளையம்.
 2. வட்டாரக் கல்வி அலுவலகம், புவனகிரி.
 3. வட்டாரக் கல்வி அலுவலகம், குறிஞ்சிப்பாடி.
 4. வட்டாரக் கல்வி அலுவலகம், நெய்வேலி நகரியம்.

மாவட்டக் கல்வி அலுவலகம், விருத்தாசலம் :

இவ்வலுவலகத்தின் தலைமை அலுவலராக மாவட்டக் கல்வி அலுவலர் பொறுப்பு வகிக்கிறார்.

தொலைபேசி எண் 04142 – 259870

இக்கல்வி மாவட்டம் 3 வட்டாரக் கல்வி அலுவலகங்களைக் கொண்டுள்ளது. அதன் அதிகாரிகளாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் உள்ளனர்.

அவை,

 1. வட்டாரக் கல்வி அலுவலகம், கம்மாபுரம்.
 2. வட்டாரக் கல்வி அலுவலகம், மங்களூர்.
 3. வட்டாரக் கல்வி அலுவலகம், நல்லூர்.
 4. வட்டாரக் கல்வி அலுவலகம், விருத்தாசலம்.

I. பள்ளிகள் :

கடலூர் மாவட்டத்தில் மேல்நிலை / உயர்நிலை / மெட்ரிக் / நடுநிலை / தொடக்க நிலை / மழலையர் பள்ளிகள் என மொத்தம் 2223 பள்ளிகள் உள்ளன.

 1. அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள்
 2. சி.பி.எஸ்.சி. பள்ளிகள்
 3. மெட்ரிக் பள்ளிகள்
 4. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள்
 5. மழலையர் பள்ளிகள்/
 6. மாநிலப் பாடத்திட்டத்தில் அரசு / நகராட்சி / மாதிரி / சமூகநலம் / ஆ.தி.ந. / அரசு நிதி உதவிபெறும் / சுயநிதி என மொத்தம் 160 உயர்நிலை மற்றும் 144 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுக்கின்றன.

II. அரசு நலத்திட்டங்கள் :

மாவட்டத்திலுள்ள அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு அவர்களின் கல்வி கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாகவும் பின்வரும் அரசின் நலத்திட்ட உதவிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு மாணவர்களால் பயன்படுத்து வருகிறது.

வ. எண் நலத்திட்டங்கள் பயனடையும் வகுப்பு மாணவர்கள்
1 சீருடை I to VIII
2 இடைநிற்றலை குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத்தொகை X to XII
3 மடிக்கணினி XII
4 காலணிகள் I to VIII
5 புத்தகப்பை I to XII
6 கணித உபகரணப் பெட்டி VI to X
7 வண்ணப் பென்சில்கள் III to V
8 வண்ணக் கிரையான்கள் I to II
9 நிலவரைப் பட நூல் VI to X
10 நோட்டுப் புத்தகங்கள் I to X
11 பாட நூல்கள் I to XII
12 மிதி வண்டி XI
13 பேருந்து பயண அட்டை I to XII
14 மதிய உணவுத் திட்டம் I to X
15 வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான நிதியுதவி I to XII

அலுவலக முகவரி விபரம்

முதன்மை கல்வி அலுவலர்,
கடலூர் 607001,
தொலைபேசி – 04142 286038
மின்னஞ்சல் – ceocud[at]nic[dot]in