மூடு

சாமியார் பேட்டை கடற்கரை

வழிகாட்டுதல்

சாமியார் பேட்டை கடற்கரை : இந்திய கிழக்குக்கரையோர பபகுதியான பாண்டிச்சேரிக்கு தெற்கே சுமார் 50 கிலோ மீட்டர்தூரத்திலும், சென்னையிலிருந்து 210 கிலோ மீட்டர் தூரத்திலும், வங்காளவிரிகுடாவின் கோரோமாண்டல் கடற்கரையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கடலூர் மாவட்டத்தில் புதுசத்திரத்தின் கிழக்கே கடலூர் மற்றும் சிதம்பரம் ஆகிய இடங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. சுமார் 1,729 மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி சுற்றியுள்ள கடலோர கிராமங்களில் மிகப்பெரியது இத0BC1. இங்குள்ள பெரும்பாலான மக்கள் மீன் பிடித்தலில் ஈடுபடுகிறார்கள். மற்ற கடலோர கிராமங்கள் போன்று பலர் மற்றநாடுகளுக்குச் சென்று குடியேறச் செய்து வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். இக்கிராமம் தென்னை மரங்களால் சூழப்பட்டுள்ளது, ஓடைகள்கிராமத்தோடு சேர்ந்து ஓடுகின்றது.இங்குபுகழ்பெற்ற “ஸ்ரீபின்ன வாழி அம்மன் கோவில்”. கடலூர் கடற்கரையுடன் அமைந்துள்ள மிகப்பெரிய கோயிலாகும். சமீபத்தில், சாமியார் பேட்டை கடற்கரை மக்களின் கவனத்தை ஈர்க்கிறது மற்றும் பிரபலமான விடுமுறை கால பொழுதுபோக்கு இடமாக உள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • சாமியார்பேட்டையில் கடற்கரை அலைகள்
  • சாமியார்பேட்டையில் கடற்கரையில் மக்கள்
  • சாமியார்பேட்டை கடற்கரையில் மாலை நேர அலைகள்

அடைவது எப்படி:

வான் வழியாக

ஆகாய மார்க்கம் : அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் சென்னை (200 கி.மீ) ஆகும். கடலூரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள விமானநிலையம் பாண்டிச்சேரி, கடலூருக்கு அருகில் உள்ளது. கடலூர் நகரத்திலிருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ள நெய்வேலியில், இந்த மாவட்டத்திலேயே, புதிய விமான நிலையம் விரைவில் தொடங்கி செயல்பட உள்ளது

தொடர்வண்டி வழியாக

புகைவண்டி மார்க்கம் : 1. சென்னை – விழுப்புரம் – கடலூர் – தஞ்சாவூர் – திருச்சி புகைவண்டி மார்க்கம் கடலூர் நகரம் மாவட்ட தலைமையகம் வழியாக இயங்குகிறது. 2. இந்த மாவட்டத்தில் மற்றும்மொரு பெரிய ரயில் பாதை உள்ளது சென்னை – எழும்பூர் – விழுப்புரம் – விருத்தாசலம் – திருச்சி. விருத்தாசலம், கடலூர் நகரத்திலிருந்து 50 கி.மீ. கடலூர் மற்றும் விருத்தாசலம் இடையே இரயில் பாதை இணைக்கப்பட்டுள்ளது.

சாலை வழியாக

சாலைவழி : கடலூர் மாவட்டத்தில் சாலை போக்குவரத்து மிகவும் நன்றாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் NH45, NH45A கடலூர் வழியாக இயங்குகின்றன. மாநில நெடுஞ்சாலைகள் 32 & 36 கடலூர் மாவட்டம் வழியாக இயங்குகின்றன. மாநில தலைநகர் சென்னையிலிருந்து கடலூர் சாலை வழியில் 200 கி.மீ.