மூடு

வெள்ளி கடற்கரை

வழிகாட்டுதல்

     இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில்வெள்ளி கடற்கரை அமைந்துள்ளது. இது கடலூர் நகரத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது. இருப்பினும், வெள்ளி கடற்கரயினால் எந்த பாதிப்பும் நகரத்திற்கு ஏற்படுவதில்லை. கோரோமாண்டல் கடற்கரையில் இரண்டாவது நீண்ட கடற்கரையும், ஆசியாவின் மிக நீண்ட கடற்கரையோரங்களில் இதுவும் ஒன்றாகும். கடற்கரையின் 57 கிமீ நீளமான கடற்கரை கடுமையான முகத்துவார அரிப்பு ஏற்படுகிறது. கடலூர் நகரபேருந்து நிலையத்திலிருந்து வெள்ளி கடற்கரை இடையே அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் மூலமாகவும் இங்கு செல்லலாம். கடற்கரைக்கு தெற்கே உள்ள தெற்கு கடலூர் ஒரு தனி தீவு போல தோன்றுகிறது. முகத்துவாரநீர் தீவு போன்ற அமைப்பிலிருந்து பிரதான கடற்கரையை பிரிக்கிறது. நீர்விளையாட்டுகளுக்கு ஏற்ற பாதுகாப்பான இடம். தற்போது படகு குழாம் மூடப்பட்டுள்ளது. மேற்கு நோக்கி உள்ள ஒரு நதியில் உள்ள அடர்ந்த மாங்குரோவ் காடுகளில் பறவைகள் தங்குவதற்கு ஏற்றசூழல் இருக்கிறது. இக்கடற்கரையில் நூற்றாண்டு பழமையான கலங்கரை விளக்கமும், ஒரு சில ஓய்வு இல்லங்களும் அமைந்துள்ளது. சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக மாநில அரசாங்கத்தின் பங்களிப்பாக பெரும்பாலான ஓய்வு இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் பேரரசினால் கட்டப்பட்ட மூன்று முக்கியமான கோட்டைகளில் ஒன்றாக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள கோட்டை செயிண்ட் டேவிட் வெள்ளி கடற்கரைக்கு அருகாமையில் உள்ளது. பெரியார் கலை மற்றும் அறிவியல் கலைகல்லூரி, கடற்கரைக்கு அருகில் உள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதங்களில் வெள்ளி கடற்கரையில் ஆண்டுதோறும் கோடை விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு, நாகப்பட்டினத்திற்கு அடுத்தபடியாக இந்த கடற்கரை 2004 ல் ஏற்பட்ட ஆசிய சுனாமியால் இரண்டாவது மிக அதிக பாதிப்புள்ள பகுதியாக இருந்தது. இச்சுனாமியால் சுமார் 2,700 க்கு அதிகமானவா்கள் இப்பகுதியில் இறந்திருக்கிறார்கள்.

புகைப்பட தொகுப்பு

  • வெள்ளி கடற்கரை கடலூர்
  • வெள்ளி கடற்கரை கடலூர்
  • வெள்ளி கடற்கரை அலைகள்

அடைவது எப்படி:

வான் வழியாக

ஆகாய மார்க்கம் : அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் சென்னை (200 கி.மீ) ஆகும். கடலூரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள விமானநிலையம் பாண்டிச்சேரி, கடலூருக்கு அருகில் உள்ளது. கடலூர் நகரத்திலிருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ள நெய்வேலியில், இந்த மாவட்டத்திலேயே, புதிய விமான நிலையம் விரைவில் தொடங்கி செயல்பட உள்ளது

தொடர்வண்டி வழியாக

புகைவண்டி மார்க்கம் : 1. சென்னை – விழுப்புரம் – கடலூர் – தஞ்சாவூர் – திருச்சி புகைவண்டி மார்க்கம் கடலூர் நகரம் மாவட்ட தலைமையகம் வழியாக இயங்குகிறது. 2. இந்த மாவட்டத்தில் மற்றும்மொரு பெரிய ரயில் பாதை உள்ளது சென்னை – எழும்பூர் – விழுப்புரம் – விருத்தாசலம் – திருச்சி. விருத்தாசலம், கடலூர் நகரத்திலிருந்து 50 கி.மீ. கடலூர் மற்றும் விருத்தாசலம் இடையே இரயில் பாதை இணைக்கப்பட்டுள்ளது.

சாலை வழியாக

சாலைவழி : கடலூர் மாவட்டத்தில் சாலை போக்குவரத்து மிகவும் நன்றாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் NH45, NH45A கடலூர் வழியாக இயங்குகின்றன. மாநில நெடுஞ்சாலைகள் 32 & 36 கடலூர் மாவட்டம் வழியாக இயங்குகின்றன. மாநில தலைநகர் சென்னையிலிருந்து கடலூர் சாலை வழியில் 200 கி.மீ.