மூடு

விருத்தகிரிஸ்வரர் கோவில்

வழிகாட்டுதல்

விருத்தகிரிஸ்வரர் கோவில் :  பிரம்மா பூமியை உருவாக்க நினைத்த போது நீரை உருவாக்கினார்.  பிரம்மாவால் உருவாக்கப்படும் உடல்கள் விஷ்ணுவால் வெட்டப்பட்டு தண்ணீரில் மிதந்தன. இதைப் பார்த்தபிரம்மா  நீர் மற்றும் சடலங்களின் சதையில் இருந்து கடினமான கலவையாக பூமி உருவாக்க வேண்டும் என்று சிவனிடம் வேண்டினார். சிவன் ஒரு மலை போல் தோன்றினார். இதனால் பல மலைகள் உருவாகியது. அம்மலையில் பிரம்மாவுக்கு இடம் இல்லாததால் அவர் வருத்தமாக இருந்தார். பிரணவதேவன் தோன்றி பிரம்மாவிடம் உண்மைகளை கூறினார். பரமாவை சக்தியாக வெளிப்படுத்தினார். பிரம்மா சிவனை வணங்கினார். சிவபெருமான் சடப்பொருளான சதைப்பகுதியையும், தண்ணீரினையும் ஒரு கடினமான வடிவத்தில் இணைத்து அதை மொ்த்தினி என்று அழைத்தார். சிவன்பிரம்மாவிற்கு மலைகளில் தங்குவதற்கு இடம் கொடுத்தார். அவர் மலையில் இருந்து வேறுபட்டவர் அல்ல என்றும் பிரம்மாவிடம் கூறினார். பிரம்மாவின் மலைகள் சிவன்மலைக்குப் பிறகு வந்தவைகள். எனவே சிவன் மலையின் பெயராக பழமலை (பழைய மலை) என்று பெயரிடப்பட்டது. பூமியின் மேலே கடுமையாக அழுத்தம் கொடுத்து. சிவன் லிங்கமாக தோன்றினார். அதை வணங்குபவர்கள் அவர்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவார்கள். கல்வெட்டுகளில். இராஜராஜசோழன், விக்ரம சோழன், மூன்றாம்ராஜா ராஜ சோழன் மூன்றாம் குலோத்துங்க சோழன், ஏழிசை மோகன குலோத்துங்க சோழன் கடவர்த்திதன் வீரசேகர கடவா்த்திதன்,அரச நாராயண கச்சிராயன், கோபெரும் சிங்கன், கச்சிராயன் என்று அழைக்கப்படுகின்ற அரசநாராயண ஏழிசை மோகன், விக்ரம பாண்டியன், வீராபாண்டியன், சுந்தர பாண்டியன், மாறவர்ம பாண்டியன், கோனரிமையா பாண்டியன், அரியன உடையார், போக்கனா உடையார், கம்பன் உடையார், வீரவிஜயராயர், முப்பிடி கிருஷ்ணபதி. ஆகிய அரசர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.

புகைப்பட தொகுப்பு

  • விருத்தசலம் கோபுர பக்க பார்வை
  • விருத்தசலம் கோபுர நுழைவாயில்
  • விருத்தசலம் கோவில் கோபுரம்தொலைவுப் பார்வை

அடைவது எப்படி:

வான் வழியாக

ஆகாய மார்க்கம் : அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் சென்னை (200 கி.மீ) ஆகும். கடலூரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள விமானநிலையம் பாண்டிச்சேரி, கடலூருக்கு அருகில் உள்ளது. கடலூர் நகரத்திலிருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ள நெய்வேலியில், இந்த மாவட்டத்திலேயே, புதிய விமான நிலையம் விரைவில் தொடங்கி செயல்பட உள்ளது.

தொடர்வண்டி வழியாக

புகைவண்டி மார்க்கம் : 1. சென்னை – விழுப்புரம் – கடலூர் – தஞ்சாவூர் – திருச்சி புகைவண்டி மார்க்கம் கடலூர் நகரம் மாவட்ட தலைமையகம் வழியாக இயங்குகிறது. 2. இந்த மாவட்டத்தில் மற்றும்மொரு பெரிய ரயில் பாதை உள்ளது சென்னை – எழும்பூர் – விழுப்புரம் – விருத்தாசலம் – திருச்சி. விருத்தாசலம், கடலூர் நகரத்திலிருந்து 55 கி.மீ. கடலூர் மற்றும் விருத்தாசலம் இடையே இரயில் பாதை இணைக்கப்பட்டுள்ளது.

சாலை வழியாக

சாலைவழி : கடலூர் மாவட்டத்தில் சாலை போக்குவரத்து மிகவும் நன்றாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் NH45, NH45A கடலூர் வழியாக இயங்குகின்றன. மாநில நெடுஞ்சாலைகள் 32 & 36 கடலூர் மாவட்டம் வழியாக இயங்குகின்றன. மாநில தலைநகர் சென்னையிலிருந்து கடலூர் சாலை வழியில் 200 கி.மீ. கடலூரில் இருந்து விருத்தசலம் சாலைவழியே சென்றடையலாம் இது 55கி.மீ ஆகும்.விருத்தசலம் மாநில தலைநகர் சென்னையிருந்து நேரடியாக புகைவன்டி மூலமும், சாலை வழியாகவும் இணைக்கப்படுள்ளது.