மூடு

தில்லை காளி கோயில்

வழிகாட்டுதல்

      தில்லை காளி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நகரின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில் ஆகும். 1229 மற்றும் 1278க்கு இடைப்பட்ட சோழ மன்னர் கோப் பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. சிதம்பரத்தின் புறநகர்ப்பகுதியில் இந்த கோயில் உள்ளது. தெய்வமாகிய காளி தேவியின் சிவபெருமானிடம் நாட்டிய போட்டியில் தோற்றபிறகு தேவி இங்கு சென்றார் என்று புராணக்கதை கூறுகிறது. ‘’சிவம்’ (சிவன்) அல்லது சக்தி (பார்வதி) யார் மேலானவர் என்று ஒரு வாதம். இதனால் சிவன், விஷ்ணு, பிரம்மா மற்றும் பிற தெய்வங்களின் முன் சிதம்பரத்தில் ஒரு நடன நிகழ்ச்சி நடத்தினார். அவர்கள் நடனம் ஆடுகையில், சிவன் தோற்கடிக்கப்பட விருந்தார். ஆனால் சிவன் ருத்துர தாண்டவம் ஆடினார். அதாவது அவரது தலைக்கு மேலே ஒரு கால் உயர்த்தினார். இந்த “ருத்துரதாண்டவம்” நடனத்தில் ஒன்றாகும். பெண்களின் தாழ்மையும், கூச்சமும் காரணமாக பெண்கள் இந்த நடனம் ஆட முடியாது. பார்வதிக்கு இந்த தோரணையில் சமமாக நன்றாக நாட்டியம் ஆட முடியவில்லை மற்றும் அவரது தோல்வியை ஒப்புக்கொண்டார். அவளது அகந்தையைக் கட்டுப்படுத்தவும் சிவம் மற்றும் சக்தி இருவருமே நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவா்கள் என ஒரு பாடம் கற்பிக்கவும் நகரத்தின் எல்லைகளுக்கு வெளியே செல்ல வேண்டியிருந்தது. ‘தில்லை காளி’ கோபத்தின் ஒரு தெய்வம். இந்த கோபம் பிரம்மாவின் வேதம் கற்பிப்பதன் மூலமும் காளியின் புகழ் பாடர்களாலும் சமாதானப்படுத்தப்பட்டது. பிரம்மா ‘காளி’ தவம் இருந்த காரணத்தால் காளி சாந்தம் ஆனார். எனவே, இந்த கோவிலில் அம்மன் தெய்வம் நான்கு முகங்களுடன் காட்சியளிக்கிறது.

புகைப்பட தொகுப்பு

  • தில்லை காளி அம்மன் கோவில் நுழைவாயில்
  • தில்லை காளி அம்மன் கோவில் கோபுரம்
  • தில்லை காளி அம்மன் சிலை

அடைவது எப்படி:

வான் வழியாக

ஆகாய மார்க்கம் : அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் சென்னை (200 கி.மீ) ஆகும். கடலூரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள விமானநிலையம் பாண்டிச்சேரி, கடலூருக்கு அருகில் உள்ளது. கடலூர் நகரத்திலிருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ள நெய்வேலியில், இந்த மாவட்டத்திலேயே, புதிய விமான நிலையம் விரைவில் தொடங்கி செயல்பட உள்ளது

தொடர்வண்டி வழியாக

புகைவண்டி மார்க்கம் : 1. சென்னை – விழுப்புரம் – கடலூர் – தஞ்சாவூர் – திருச்சி புகைவண்டி மார்க்கம் கடலூர் நகரம் மாவட்ட தலைமையகம் வழியாக இயங்குகிறது. 2. இந்த மாவட்டத்தில் மற்றும்மொரு பெரிய ரயில் பாதை உள்ளது சென்னை – எழும்பூர் – விழுப்புரம் – விருத்தாசலம் – திருச்சி. விருத்தாசலம், கடலூர் நகரத்திலிருந்து 50 கி.மீ. கடலூர் மற்றும் விருத்தாசலம் இடையே இரயில் பாதை இணைக்கப்பட்டுள்ளது.

சாலை வழியாக

சாலைவழி : கடலூர் மாவட்டத்தில் சாலை போக்குவரத்து மிகவும் நன்றாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் NH45, NH45A கடலூர் வழியாக இயங்குகின்றன. மாநில நெடுஞ்சாலைகள் 32 & 36 கடலூர் மாவட்டம் வழியாக இயங்குகின்றன. மாநில தலைநகர் சென்னையிலிருந்து கடலூர் சாலை வழியில் 200 கி.மீ. சிதம்பரம் கடலூரில் இருந்து 50.கி.மீ