மூடு

சிதம்பரம் கோயில்

வழிகாட்டுதல்

நடராஜர் கோயில், சிதம்பரம் தில்லை நடராஜ் கோவில் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் தெற்கு மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம்

எனும் ஊரில் அமைந்துள்ள நடராசர் கோயில் மிகச் சிறப்பு பெற்ற கோயிலாகும். இக்கோயில் பஞ்சப்பூத தலங்களில் ஒன்றாக உள்ளது இந்த கோவில் மிக நீண்ட புராண தொடர்பு உடையது.

கோயிலின் கட்டிடக்கலை கலைக்கும் ஆன்மீகத்திற்கும் இடையில் உள்ள தொடர்பை பிரதிபலிக்கிறது. சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கிய சிதம்பரத்தில் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சோழர்கள்

தங்கள் குலதெய்வமாக சிதம்பரம் நடராஜர் சோழர்கள் கருதினர். இந்த நடராஜர் கோவில் 2 மில்லினியம் முழுவதும் சேதம், சீரமைப்பு மற்றும் விரிவாக்கம் அடைந்துள்ளது. சிவன் கோயிலின் முக்கிய தெய்வமாக

இருந்தாலும், வைஷ்ணவியம், ஷக்திசம் மற்றும் மற்றவர்களிடமிருந்து வரும் முக்கிய கருப்பொருள்களையும் இது பிரதிபலிக்கிறது. சிதம்பரம் கோவில் வளாகம் தென் இந்தியாவில் உள்ள பழமையான

கோயில்களில் ஒன்றாகும். நடராஜ் கோயிலின் மிகவும் தனித்தன்மை வாய்ந்த சிறப்பியல்பு நடராஜின் மனநிறைவுதரும் படமாகும்.

இந்த கோவிலில் ஐந்து முக்கிய ஹால் அல்லது சபாக்கள் உள்ளன, அவை கனகா சபா, சித்த சபை, நிருட்டா சபா, தேவா சபா மற்றும் ராஜசா. சிவனின் மிக முக்கியமான வடிவங்களில் ஒன்றாகும் நடராஜர்.

சிதம்பரம் நாட்டில் சிவன் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இந்த இடம் கலாச்சார வரலாற்று பார்வையிலும், வரலாற்று முன்னோடிகளிலும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

இப்போது மேற்கு நாட்டு விஞ்ஞானிகளும் நடராஜரின் பெருவிரலை உலகின் காந்த மின்புலத்தின் மைய மையமாகக் கொண்டு உள்ளது என்று நிரூபித்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் அற்புதங்கள் பல அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.”

  1. இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் காந்த புலத்தின் மைய மையத்தில், பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதியில் என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’sMagnetic Equator ).
  2. பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவதுசரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம்

    அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

  3. மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
  4. விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 =21,600).
  5. இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை (நரம்புகள்) குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத்தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
  6. திருமந்திரத்தில் ” திருமூலர்”” மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்”. என்ற பொருளைக் குறிகின்றது.சிவபெருமானின் உருவத்தை மனிதன்பிரதிபலிக்கிறாரோ என்று திருமூலர் கூறுகிறார். சிதம்பரத்தை பிரதிபலிக்கும் சதாசிவம் பிரதிஷ்டை இது.
  7. “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக சற்று சாய்ந்து அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி”என்று அழைக்கப்படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க

    4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

  8. பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
  9. பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
  10. சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது

சிதம்பரம் நடராஜர் கோயிலுடன் மிகவும் பழங்காலத் தொன்மங்கள் தொடர்பு உடையன. ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை ஆகி யவை வருடாந்திர திருவிழாக்கள், மற்றும் பாரம்பரிய

கொண்டாட்டங்களும் கொண்டாடப்படும்.இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.

புகைப்பட தொகுப்பு

  • நடரஜர் கோவிலின் கோபுரம்
  • நடரஜர் கோவில் கர்பகிரகம்
  • நடராஜர் கோவில் மூலவர்

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகில் உள்ள ஆகயவிமான நிலயம் சென்னை. சென்னையில்யிருந்து 250 கி.மீ. துரம் தரைவழில் பயனிக்கவேண்டும் சிதம்பரம் வந்து சேர்ந்திட.

தொடர்வண்டி வழியாக

சென்னையில் இருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சிதம்பரம் சென்று அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 240 கி.மி. தொலைவில் சிதம்பரம் இருக்கிறது

சாலை வழியாக

சென்னையில் இருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சிதம்பரம் சென்று அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 240 கி.மி. தொலைவில் சிதம்பரம் இருக்கிறது