முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
திட்டம் :
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர்.
இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது.
இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதவி மையம் :
இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தொிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.
விரிவான மற்றும் மேம்படுத்தப்பட்ட தகவல்களுக்கு, பார்க்க http://www.cmchistn.com/
பயனாளி:
விரிவான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவலுக்கு, மேலே உள்ள இணைப்பைப் பார்வையிடவும்.
பயன்கள்:
விரிவான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவலுக்கு, மேலே உள்ள இணைப்பைப் பார்வையிடவும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தொடர்பு கொள்ளவும்:
மாவட்ட திட்ட அலுவலர்,
மாவட்ட பதிவு மையம்,
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், தொடர்பு அலுவலக முகவரி
கடலூர் – 607 001.
தொலைபேசி: 04142 230052
Mail: Cuddaloregh[at]gmail.com