அடைவது எப்படி
சென்றடைய போக்குவரது வழிகள் :
ஆகாய மார்க்கம் : அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் சென்னை (200 கி.மீ) ஆகும். கடலூரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள விமானநிலையம் பாண்டிச்சேரி, கடலூருக்கு அருகில் உள்ளது. கடலூர் நகரத்திலிருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ள நெய்வேலியில், இந்த மாவட்டத்திலேயே, புதிய விமான நிலையம் விரைவில் தொடங்கி செயல்பட உள்ளது
புகைவண்டி மார்க்கம் : 1. சென்னை – விழுப்புரம் – கடலூர் – தஞ்சாவூர் – திருச்சி புகைவண்டி மார்க்கம் கடலூர் நகரம் மாவட்ட தலைமையகம் வழியாக இயங்குகிறது.
2. இந்த மாவட்டத்தில் மற்றும்மொரு பெரிய ரயில் பாதை உள்ளது சென்னை – எழும்பூர் – விழுப்புரம் – விருத்தாசலம் – திருச்சி. விருத்தாசலம், கடலூர் நகரத்திலிருந்து 50 கி.மீ. கடலூர் மற்றும் விருத்தாசலம் இடையே இரயில் பாதை இணைக்கப்பட்டுள்ளது.
சாலைவழி : கடலூர் மாவட்டத்தில் சாலை போக்குவரத்து மிகவும் நன்றாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் NH45, NH45A கடலூர் வழியாக இயங்குகின்றன. மாநில நெடுஞ்சாலைகள் 32 & 36 கடலூர் மாவட்டம் வழியாக இயங்குகின்றன. மாநில தலைநகர் சென்னையிலிருந்து கடலூர் சாலை வழியில் 200 கி.மீ.