• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

வேளாண்மைத் துறை

வேளாண்மைத் துறை  :

கடலூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக் கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, அரசின் கொள்கைகளும், நோக்கங்களும் வகுக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயம் சார்ந்த தொழிலகங்களின் மூலப்பொருள்கள் கிடைப்பது உறுதிசெய்யப்படுவதுடன், ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் கிடைக்கப்பெறுகிறது.
இம்மாவட்ட விவசாயிகள் மாறிவரும் தொழில் நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும் பயன்படுத்துவதிலும் முன்னோடியாக விளங்குவதால், வேளாண் உற்பத்தியில் கடலூர் மாவட்டம் முன்னோடி மாவட்டங்களுள் ஓன்றாக விளங்குகிறது.

அலுவலக முகவரி விபரம்

இணை இயக்குநர்,
வேளாண்மைத் துறை,
கடலூர் 607001,
தொலைபேசி – 04142 290658