வேளாண்மைத்துறை
வேளாண்மைத்துறை
கடலூர் மாவட்டத்தினுடைய பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக வேளாண்மைத் தொழில் இருந்து வருகின்றது. இம்மாவட்டத்தில் 3,13,223 எக்டர் பரப்பு சாகுபடி செய்யப்படுகின்றது. இதில் 1,85,925 எக்டருக்கு பாசன வசதி உள்ளது.
விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான அரசின் கொள்கைகளும் நோக்கங்களும் வகுக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு மூலப்பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுவதுடன் ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் கிடைக்கப் பெறுகிறது.
மழை அளவு
கடலூர் மாவட்டத்தின் சராசரி மழை அளவு 1206.7 மி.மீட்டராகும் இம்மாவட்டம் அனைத்து பருவ காலங்களிலும் மழை பெறுகின்றது. இருப்பினும் அதிகமான மழை அளவு வடகிழக்கு பருவ மழை மூலம் மட்டுமே கிடைக்கப் பெறுகின்றது.
மண்வகைகள்
மண்வகைகள் | முகவரி |
---|---|
செம்மண் | பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் |
சரளை மண் | விருத்தாசலம், திட்டக்குடி |
கரிசல் மண் | காட்டுமன்னார்கோயில், கடலூர், சிதம்பரம் |
மணல் கலந்த கடலோர வண்டல் மண் |
கடலூர், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை |
வ.எண் | வாய்க்காலின் பெயர் | வாய்க் காலின் நீளம்(கி.மீ) | கிளை வாய்க் கால்களின் எண்ணிக்கை | பாசன பரப்பு (எக்) | பயனடையும் வட்டாரங்கள் |
---|---|---|---|---|---|
1 | வடவாறு | 21 | 24 | 4740 | காட்டுமன்னார் கோயில் |
2 | வடக்கு ராஜன்
1) கான்சாகிப் 2) கவரப்பட்டு |
45
41 18 |
71
59 10 |
10934
3997 1000 |
காட்டுமன்னார் கோயில்
பரங்கிப்பேட்டை, குமராட்சி |
3. | கஞ்சன்கொல்லை | 4 | – | 311 | காட்டுமன்னார் கோயில் |
4 | விநாயகன்தெரு வாய்க்கால் | 1.8 | – | 80 | குமராட்சி |
மொத்தம் | 130.8 | 164 | 21062 |
வீராணம் ஏரி
- கிளை வாய்க்கால்களின் எண்ணிக்கை – 34
- பாசன பரப்பு – 19776 எக்
வ.எண் | ஏரி /வாய்க்காலின பெயர் | கிளை வாய்க்கால்களின் எண்ணிக்கை | பாசன பரப்பு (எக்) | பயனடையும் வட்டாரங்கள் |
---|---|---|---|---|
1 | வெள்ளாறு ராஜன் வாய்க்கால் | 11 | 8761 | மேல்புவனகிரி,
பரங்கிப்பேட்டை |
2 | வாலாஜா ஏரி
|
11 | 4557 | மேல்புவனகிரி,
குறிஞ்சிப்பாடி |
3 | பெருமாள் ஏரி | 11 | 2601 | குறிஞ்சிப்பாடி |
மொத்தம் | 33 | 15919 |
வ.எண் | ஏரி / வாய்க்காலின் பெயர் | பாசன பரப்பு |
---|---|---|
1 | வெலிங்டன் நீர்தேக்கம் | 9623 |
2 | மேமாத்தூர் | 2540 |
3 | பெலாந்துறை | 4893 |
4 | விருத்தாசலம் அணைக்கட்டு | 3765 |
பயிர் சாகுபடி விபரம்
கடலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய பயிர்கள் நெல், கம்பு, மக்காச்சோளம், வரகு, உளுந்து, பச்சைப்பயறு, கரும்பு, மணிலா, எள் மற்றும் பருத்தி ஆகும். மொத்த சாகுபடி பரப்பு 247582 எக்டர். இவற்றில் இறவை சாகுபடியாக 65 சதவீதமும் மீதம் 35 சதவீதம் மானாவாரி பயிராக சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
வேளாண்மைத்துறை நிர்வாக அமைப்பு
மாவட்ட அளவிலான துறை நிர்வாக அமைப்பு
வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற அனைத்து திட்டங்களையும் கண்காணித்தல், மேற்பார்வையிடுதல் மற்றும் செயல்படுத்தும் அலுவலராக செயல்படுகிறார். மேலும், வேளாண்மைத்துறையுடன் அனைத்து சகோதரத்துறைகளுக்கும் தொடர்பு அலுவலராக செயல்படுகிறார்.
அலுவலர் 1 | அலுவலர் 2 | அலுவலர் 3 | அலுவலர் 4 |
---|---|---|---|
வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) | வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) | வேளாண்மை துணை இயக்குநர் (மா.ஆ.நே.உ (விவ) | வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) |
வேளாண்மை அலுவலர் (மத்திய திட்டம்) |
வேளாண்மை அலுவலர் (மாநில திட்டம்) | வேளாண்மை அலுவலர் (மா.ஆ.நே.உ / (விவ) | வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) |
வட்டார அளவிலான துறை நிர்வாக அமைப்பு
கடலூர் மாவட்டத்தில் வட்டார அளவில் 13 வேளாண்மை விரிவாக்க மையங்கள் வேளாண்மை உதவி இயக்குநர்களை தலைமை அலுவலராக கொண்டு செயல்படுகின்றன. வேளாண்மைத் தொடர்பான அனைத்து திட்டங்களும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலமாக வட்டார அளவில் செயல்படுத்தப்படுகின்றது.
- வேளாண்மை உதவி இயக்குநர்
- வேளாண்மை அலுவலர்
- துணை வேளாண்மை அலுவலர்
- உதவி வேளாண்மை அலுவலர்-1
- உதவி வேளாண்மை அலுவலர்-2
- உதவி வேளாண்மை அலுவலர்-3
- உதவி வேளாண்மை அலுவலர்-4
- உதவி வேளாண்மை அலுவலர்-5
- உதவி வேளாண்மை அலுவலர்-6
- உதவி விதை அலுவலர்
வ.எண் | வட்டார அலுவலகம் | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி |
---|---|---|---|
1 | வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், கடலூர் | 04142-290068 | adacud@gmail[dot]com |
2 | வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், குறிஞ்சிப்பாடி | 04142-258090 | adakpd@gmail[dot]com |
3 | வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், பண்ருட்டி | 04142-242666 | adapanruti@gmail[dot]com |
4 | வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்,அண்ணாகிராமம் | 04142-277155 | adaannagramam@gmail[dot]com |
5 | வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், பரங்கிப்பேட்டை | 04144-230358 | adaparangi@gmail[dot]com |
6 | வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், மேல்புவனகிரி | 04144-240343 | adambvg11@gmail[dot]com |
7 | வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், கீரப்பாளையம் | 04144-240353 | keeraiadaagri@gmail[dot]com |
8 | வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், காட்டுமன்னார்கோயில் | 04144-262678 | kmkada123@gmail[dot]com |
9 | வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், குமராட்சி | 04144-251340 | adakum22@gmail[dot]com |
10 | வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், விருத்தாசலம் | 04143-239499 | adavri2017@gmail[dot]com |
11 | வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், கம்மாபுரம் | kammapuramada@gmail[dot]com | |
12 | வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், மங்களுர் | 04143-246789 | mangaloreada@gmail[dot]com |
13 | வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், நல்லூர் | 04143-249477 | Nallurada@gmail[dot]com |
உள்கட்டமைப்பு வசதிகள்
அரசு விதைப்பண்ணை – வண்டுராயன்பட்டு மற்றும் மிராளுர்
கருவிதைகள் மற்றும் ஆதார விதைகளைக் கொண்டு விதைப்பண்ணை அமைத்து விதை பெருக்கம் செய்து, வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. சான்று விதைகளை பெருக்கம் செய்து விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்வதே மாநில விதைப்பண்ணைகளின் நோக்கமாகும். நெல், பயறுவகை மற்றும் பசுந்தாள் உரப்பயிர்கள் ஆகிய பயிர்களுக்கான விதைப்பண்ணைகள் அரசு விதைப்பண்ணைகளில் அமைக்கப்படுகிறது.
தென்னை நாற்றங்கால் – நெய்வேலி
கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு தேவையான தரமான நெட்டை, நெட்டை மற்றும் குட்டை தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து வழங்குவதே தென்னை நாற்றுப் பண்ணையின் நோக்கமாகும்.
உயிர் உரங்கள் உற்பத்தி மையம்- கடலூர்
அசோஸ்பைரில்லம் (நெல்) அசோஸ்பைரில்லம் (இதரம்) ரைசோபியம் (பயறுவகைகள்), ரைசோபியம் (நிலக்கடலை) மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஆகிய உயிர் உரங்கள் திட மற்றும் திரவ நிலைகளில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி இரசாயண உரங்கள் பயன்பாட்டை குறைத்து மண்வளத்தை மேம்படுத்துவதே உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தின் நோக்கமாகும்
பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வகம் – கடலூர்
தரமான பூச்சிக்கொல்லி மருந்துகள் விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை மையங்களில் இருந்து பூச்சிக் கொல்லி மருந்து மாதிரிகள் எடுத்து பூச்சிக் கொல்லி மருந்து ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரமற்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் விவசாயிகளை சென்றடைவது தடுக்கப்படுகிறது.
மண் பரிசோதனை நிலையம் – கடலூர்
மண்மாதிரிகள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டு மண்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வின் முடிவறிக்கையின்படி மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவின்படி பயிர்களுக்கு தேவையான ரசாயன உரங்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இதனால் மண்ணின் தன்மை பாதுகாக்கப்படுவதோடு ரசாயன உரங்கள் பயன்பாடு குறைந்து உற்பத்தி செலவினமும் குறைகிறது.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை
ஆராய்ச்சி, விரிவாக்கம் மற்றும் விவசாயிகளிடையே தொழில்நுட்பங்களை கொண்டு செல்ல வேளாண்மைத்துறைக்கு ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. இம்முகமை மூலம் செயல்விளக்கங்கள், பயிற்சிகள் மற்றும் கண்டுணர் சுற்றுலா மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களை எடுத்துச் செல்வதே இதன் நோக்கமாகும்.
திட்டங்கள்
தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துச் சென்று வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்காக பல்வேறு திட்டங்கள் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு சார்பு திட்டங்கள்
- தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் – நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துக்கள், கரும்பு மற்றும் பசுந்தாள் உரம் மூலம் மண்வளத்தை மேம்படுத்துதல்
- தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் – எண்ணெய் வித்துக்கள், எண்ணெய் பனை மற்றும் எண்ணை வித்து மரப்பயிர்கள்
- தேசிய உணவு பாதுகாப்புத் திட்டங்கள் – பயறு வகைகள், சிறுதானியங்கள் மற்றும் வணிக பயிர்கள்
- தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் – ஒருங்கிணைந்த பண்ணையம்
- தென்னை வளர்ச்சி வாரியத் திட்டங்கள்
- விதை கிராமத் திட்டம் – நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துக்கள் சான்று விதை விநியோகம்
- பாரம்பரிய வேளாண்மை சாகுபடி திட்டம்
- பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம்
- நீடித்த நிலையான மானாவாரி வேளாண் இயக்கம் – மானாவாரி சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் பருத்தி
- தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம்
மாநில அரசு சார்பு திட்டங்கள்
- விதை பெருக்குத் திட்டம் – தமிழ்நாடு விதை மேலாண்மை முகமை
- பயிர்களின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு
- விவசாயிகளுக்கு தேவையான விதைகள் மற்றும் இதர இடுபொருட்களை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்தல்
- அயம்வாம் திட்டத்தின்கீழ் செயல்விளக்க திடல்கள் அமைத்தல் மற்றும் நீர் மேலாண்மை யுக்திகள் செயல்படுத்துதல்.
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம்
பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீட்டுத் திட்டம் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2016-17-ஆம் ஆண்டு ரபி பருவம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு முன் தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டம் என்ற திட்டம் செயல்பாட்டில் இருந்து வந்தது. இத்திட்டத்தின்கீழ் பிர்காவில் உள்ள ஓரிரு கிராமங்களில் பயிர் அறுவடை பரிசோதனை நடத்தப்பட்டு அந்த மகசூல் அடிப்படையின்படி அந்த பிர்க்காவை சார்ந்த கிராமங்களுக்கு பயிர் இழப்பீடு கணக்கிடப்பட்டது. ஆனால், தற்போது செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கிராம வாரியாக பயிர் அறுவடை பரிசோதனை தளைகள் அமைக்கப்பட்டு பரிசோதனை முடிவில் கிடைக்கும் மகசூல் அடிப்படையில் அந்த கிராமத்திற்கு பயிர் இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தந்த கிராமத்தில் பெறப்படும் மகசூல் அடிப்படையில் காப்பீடு தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கூட்டு பண்ணைய திட்டம்
- சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே கூட்டு பண்ணைய ஆர்வத்தை ஊக்குவித்தல்
- கூட்டு பண்ணையம் கூட்டாக இடுபொருட்கள் கொள்முதல் கூட்டாக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் உற்பத்தியை அதிகரித்து கூட்டாக விற்பனை செய்தல். இதன் மூலம் விலைபொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யும் திறன் பெருவதோடு நிகர லாபம் அதிகரிக்க வழிவகை செய்தல்.
- கூட்டுப்பண்ணைய திட்டம் – உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்தல்
தொடர்புக்கு
வேளாண்மை இணை இயக்குநர்,
வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம்,
குண்டுசாலை, செம்மண்டலம்,
கடலூர்- 607 001. போன் 04142- 290658.