மூடு

வெள்ளாறு பாலம் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 06/08/2018
புவனகிரி வெள்ளாறு பாலம் ஆய்வு

கடலூர் மாவட்டம் புவனகிரி வெள்ளாற்றில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் அருகே அமைந்துள்ள பழைய பாலத்தின் உறுதித்தன்மையை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் திருமதி.ஆர்.கீதா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) திரு.எம்.பன்னீர்செல்வம், கடலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) திரு.ஜெ.கு.ரமேஷ்கண்ணா, உதவி கோட்டப்பொறியாளர்கள் திரு.ந.சந்தோஷ்குமார் (குறிஞ்சிப்பாடி) திரு.ஆர்.ஸ்ரீநிவாசன் (கடலூர்) ஆகியோர் உள்ளனர்.

வெள்ளாறு பாலம் ஆய்வு விபரம்[19 KB]