மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புரெவி புயல் பாதிப்புகள் பாா்வையிட வருகை
வெளியிடப்பட்ட தேதி : 09/12/2020

நிவர் புயல் பாதித்த மறுதினமே கடலூர் மாவட்டத்திற்கு நேரில் வருகை புரிந்து மறுசீரமைப்பு பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டார்கள். தொடர்ந்து இரண்டாவது முறையாக புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று (8.12.2020) கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் அனுக்கம்பட்டில் புயல் மற்றும் கனமழையால் வேளாண் நிலங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சா் வருகையின் விபரம்-1 [ 33 kb]
வருகையின் விபரம்-2 [196 kb]